இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : 13வது முறையாக ரபாடாவிடம் வீழ்ந்த ரோஹித் ஷர்மா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செஞ்சூரியனில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தொடங்கி நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஐந்தாவது ஓவரில் ரோஹித் ஷர்மாவை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது முறையாக ககிசோ ரபாடா ரோஹித் ஷர்மாவை அவுட்டாக்கினார். மேலும், ஒட்டுமொத்தமாக 13வது முறையாக ககிசோ ரபாடாவின் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா அவுட்டாகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ரபாடாவின் டெஸ்ட் புள்ளிவிபரம்
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரராக ககிசோ ரபாடா உள்ளார். இந்தியாவுக்கு எதிராக தனது 13வது டெஸ்டில் விளையாடிய ரபாடா, 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக ரபாடா இரண்டு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேல் ஸ்டெய்ன் (65), மோர்னே மோர்கல் (58), ஆலன் டொனால்ட் (57), ஷான் பொல்லாக் (52) ஆகியோர் மட்டுமே இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்தவர்களில் முன்னிலையில் உள்ளனர். மேலும், ஒட்டுமொத்தமாக தனது 61வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரபாடா, 281 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.