ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு
ஜனவரி 13 முதல் 19 வரை ராஞ்சியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான 18 பேர் கொண்ட மகளிர் இந்திய ஹாக்கி அணி சனிக்கிழமை (டிசம்பர் 30) அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த கோல்கீப்பர் சவிதா புனியா அணியை தொடர்ந்து வழிநடத்துவார் மற்றும் வந்தனா கட்டாரியா அணியின் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். ராஞ்சியில் நடக்க உள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் 2024இல் பாரிஸில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்யும். இதற்கிடையே, சவிதா சமீபத்தில் தனது மூன்றாவது தொடர்ச்சியான எப்ஐஎச் சர்வதேச கோல்கீப்பர் ஆஃப் தி இயர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தகுதிச் சுற்று இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் பட்டியல்
கோல்கீப்பர் : சவிதா புனியா (கேப்டன்), பிச்சு தேவி கரிபாம் டிஃபென்டர்ஸ் : நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, மோனிகா. மிட்ஃபீல்டர்கள்: நிஷா, வைஷ்ணவி விட்டல் பால்கே, நேஹா, நவ்நீத் கவுர், சலிமா டெட்டே, சோனிகா, ஜோதி, பியூட்டி டுங்டுங். ஃபார்வார்ட்ஸ் : லால்ராம்சியாமி, சங்கீதா குமாரி, தீபிகா, வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இந்தியா நியூசிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்காவுடன் பி குழுவில் இடம்பெற்றுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிராகவும், ஜனவரி 16ஆம் தேதி இத்தாலியுடனும் லீக் சுற்றில் மோத உள்ளது.