செயற்கை நுண்ணறிவு: செய்தி

வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன அல்லது தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன.

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்ட மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா

1990-களில் ஏற்பட்ட இணைய வளர்ச்சியுடன் தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒப்பிட்டிருக்கிறார் மைக்ரோசஃப்டின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா.

நீங்கள் அழுத்தும் key-இன் ஓசையை வைத்தே உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறியும் AI கருவிகள்

எந்தவொரு தொழில்நுட்பமும் ஆக்கத்திற்கு மட்டுமல்ல அழிவுக்கும் பயன்படும். அதற்கு ஒரு உதாரணமாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நூதன முறையில் பாஸ்வேர்டைக் கண்டறிய முடியும் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கின்றனர்.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்டிக்கரை உருவாக்கும் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப் 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை உருவாக்கிப் பகிரும் புதிய வசதியை பீட்டா சோதனையாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பொய்யான, தவறான தகவல்கள் மற்றும் செய்திகளை வடிகட்ட முடியாத AI சாட்பாட்கள்

செயற்கை நுண்ணறிவு சாட்பாட் போட்டியில் முன்னணியில் இருக்கும் இரண்டு கருவிகளான ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் பார்டு ஆகிய இரண்டு சாட்பாட்களும், பொய்யான அல்லது தவறான தகவல்களை உருவாக்கிக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது நியூஸ் கார்டு (News Guard) நிறுவனம்.

கடும் நிதிநெருக்கடி; 2024இல் சாட்ஜிபிடி நிறுவனம் திவாலாகும் என கணிப்பு

சாம் ஆல்ட்மேன் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அனலிடிக்ஸ் இந்தியா இதழின் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஓபன்ஏஐயிடம் இருந்து எலான் மஸ்க்கிடம் சென்ற ai.com டொமைன் பெயர்

Ai.com என்ற டொமைன் பெயரானது ஓபன்ஏஐ நிறுவனத்திடம் இருந்து எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்திற்கு கைமாறியிருக்கிறது. முன்னர் ai.com என்ற டொமைன் பெயரைப் பயன்படுத்தினால், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தளத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும். ஆனால், தற்போது எலான் மஸ்க்கின் x.ai தளத்திற்குக் கூட்டிச் செல்கிறது.

சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டது ஓபன்ஏஐ

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகமெங்கும் தங்களது புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம்.

க்ரோம் மற்றும் சஃபாரியிலும் பிங் சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்

கடந்த மே மாதம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பிங் சாட்பாட்டை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்தது மைக்ரோசாஃப்ட். ஆனால், அதனை மைக்ரோசாப்ட் சொந்த தேடுபொறியான எட்ஜில் மட்டுமே பயன்படுத்த முடிந்து வந்தது.

அடுத்த வாரம் வெளியாகிறது 'சாட்ஜிபிடி'யின் ஆண்ட்ராய்டு செயலி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட சாட்பாட்டை வெளியிட்டு இணையத்தையே அதிரவைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனம்.

'ஜெனிசிஸ்' துணையுடன், செய்திகள் எழுத தயாராகும் கூகிள்

பல நிறுவனங்கள், தங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுவதற்கும், சந்தையில் முன்னணி இடத்தை தக்கவைத்து கொள்வதற்கும் உபயோகித்து வருவது, AIசெயலிகளை.

19 Jul 2023

மெட்டா

'Llama 2' லாங்குவேஜ் மாடலை ஓபன் சோர்சாக வெளியிட்டுள்ளது மெட்டா

கடந்த வாரம் டெக்ஸ்ட்-டூ-இமேஜ் மற்றும் இமேஜ்-டூ-டெக்ஸ்ட் என இரு வகையிலும் பயன்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவுக் கருவியான கேமிலியான் (CM3leon) என்ற கருவியை வெளியிட்டது மெட்டா.

14 Jul 2023

இந்தியா

தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது, உலகளவில் செய்தித்துறையை அதிகளவில் ஆட்கொண்டு வரும் நிலையில், உலகளவில் பல செய்தி நிறுவனங்கள் AI செய்தித் தொகுப்பாளர்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

சாட் ஜிபிடி, பார்டுக்கு போட்டியாக களமிறங்கியது எலான் மஸ்கின் xAI

xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த மார்ச் மாதம் தொடங்கினாலும், அதன் பின்னர் நிறுவனம் குறித்த எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.

வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு

வருமான வரித்துறையைத் தொடர்ந்து, இந்தியா கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை தணிக்கையாளர் அமைப்பும் (CAG) பொய்யான பயனாளர்கள், தவறான பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர்.

03 Jul 2023

வணிகம்

பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி 

இந்தியாவில் உணவு டெலிவரி சேவைக்கு மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் தங்கள் தளத்தை சந்தைப்படுத்துவதற்காக படைப்பாற்றல் மிக்க நகைச்சுவையான பதிவுகளை பதிவிடுவதிலும் புகழ் பெற்ற நிறுவனம் ஸோமாட்டோ.

புதிய AI சாதனத்தை உருவாக்கியிருக்கும் முன்னாள் ஆப்பிள் ஊழியர்கள்

முன்னாள் ஆப்பிள் ஊழியர்களான இம்ரான் சௌத்ரி மற்றும் பெத்தனி போன்ஜோர்னோ ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய 'ஹ்யூமேன்' (Humane) ஸ்டார்ட்அப்பானது இந்த ஆண்டு தொடக்கத்தில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியைத் திரட்டியிருந்தது.

பிங் தேடுபொறியுடன் இணைய வசதியைப் பெறும் சாட்ஜிபிடி

கடந்தாண்டு நவம்பரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்ஜிபிடி சாட்பாட்டை வெளியிட்டது ஓபன்ஏஐ. அப்போது சாட்ஜிபிடிக்கு போட்டியாக வேறு எந்த சாட்பாட்டும் சந்தையில் இல்லை.

பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn

உலகின் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய சேவையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா!

இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தான்.

15 Jun 2023

கூகுள்

கால் ரெக்கார்டிங் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர்

கூகுள் நிறுவனமானது தங்களது ப்ளே ஸ்டோர் கொள்கைகளைக் கடந்த ஆண்டு மாற்றியமைத்த பிறகு, அதற்கு ஏற்ற வகையில் சேவை வழங்குவதற்காக கால் ரெக்கார்டிங் வசதியை தங்கள் சேவையில் இருந்து நீக்கியது ட்ரூகாலர் நிறுவனம்.

பெருகும் AI பாட்களின் தேவை.. களத்தில் குதித்த இந்திய டெக் நிறுவனம்!

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் சாட்ஜிபிடி போன்ற, ஆனால் தங்கள் தகவல்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையைத் தேடி வருகின்றன.

CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி?

CoWIN தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் தகவல்களை ஒரு டெலிகிராம் பாட் மூலம் அணுக முடிகிறது என திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சாகேத் கோகலே பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன்

உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து உரையாடத் திட்டமிட்டிருக்கிறார் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

AI தொழில்நுட்பத்தைக் கொண்டு சேவையை மேம்படுத்தும் ஸோமாட்டோ

பெரு நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் பல்வேறு சிறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை தங்களது சேவைகளில் வழங்க முயன்று வருகின்றன.

07 Jun 2023

ஆப்பிள்

சாட்ஜிபிடியை கூர்ந்து கவனித்து வருகிறேன்.. டிம் கும் சொன்னது என்ன?

சாட்ஜிபிடியை தான் பயன்படுத்துவதாக, அந்த சாட்பாட்டின் மீதான தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆப்பிள் சிஇஓ டிம் குக். சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்திருக்கிறார் அவர்.

லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்.. எப்படி இயங்குகிறது?

கடந்த சில மாதங்களாக மென்பொருட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தற்போது வன்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

AI தொழில்நுட்பத்தையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடி-யை வெளியிட்டது ஓபன்ஏஐ நிறுவனம்.

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்?

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் தலைப்பாக இருப்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான்.

29 May 2023

கூகுள்

'Search Labs' வசதியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள்!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கூகுள் தேடுபொறி வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற I/O நிகழ்வில் அறிவித்திருந்தது கூகுள்.

AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா!

கனடாவைச் சேர்ந்த தனியுரிமை ஒழுங்குமுறை ஆணையங்கள் சேர்ந்து சாட்ஜிபிடியின் தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி!

கடந்த மே 18-ம் தேதி அமெரிக்காவில் சாட்ஜிபிடியின் IOS செயலியை வெளியிட்டதைத் தொடர்ந்து, நேற்று மேலும் 12 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். தற்போது இந்தியா உள்ளிட்ட மேலும் 30 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ.

IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI

IOS-க்கான சாட்ஜிபிடி செயலியை பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 12 நாடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம்.. ஓபன்ஏஐ சிஇஓ கருத்து!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான சட்டங்களை உலகில் முதன்முதலாக முதலாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய சட்டமானது நிறைவேறுவதன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!

சாட்ஜிபிடியின் வரவைத் தொடர்ந்து ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு!

தொடர்ந்து அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!

ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக காங்கிரஸின் முன்பு நேற்று ஆஜரானார்.

16 May 2023

சென்னை

சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!

சென்னை ஐஐடியின் Centre for Responsible AI (CeRAI) ஆராய்ச்சி மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா?

உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவை. ஆனால், AI-களுக்கான சட்டத்தை உருவாக்குவதில் தடைகளைச் சந்தித்து வருகிறது அமெரிக்கா.