LOADING...
சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டது ஓபன்ஏஐ
சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டது ஓபன்ஏஐ

சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டது ஓபன்ஏஐ

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 26, 2023
11:19 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகமெங்கும் தங்களது புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, கடந்த மே மாசம் அதன் ஐஓஎஸ் செயலியை வெளியிட்டது ஓபன்ஏஐ. தற்போது இறுதியாக சாட்ஜிபிடியின் ஆண்ட்ராய்டு செயலியையும் வெளியிட்டிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம். முதற்கட்டமாக, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளில் இந்த புதிய ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டிருக்கிறது ஓபன்ஏஐ. வரும் நாட்களில் பிற நாடுகளுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறது. இணையத்தில் ஏற்கனவே சாட்ஜிபிடியைப் பயன்படுத்துபவர்கள், அந்தக் கணக்கை ஆண்ட்ராய்டு செயலியிலும் இணைத்து தொடர்ந்து பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம். சாட்ஜிபிடி செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Embed

Twitter Post

ChatGPT for Android is now available for download in the US, India, Bangladesh, and Brazil! We plan to expand the rollout to additional countries over the next week. https://t.co/NfBDYZR5GI— OpenAI (@OpenAI) July 25, 2023