Page Loader
புதிய AI சாதனத்தை உருவாக்கியிருக்கும் முன்னாள் ஆப்பிள் ஊழியர்கள்
ஹ்யூமேன் ஸ்டார்ட்அப்பின் முதல் சாதனமான AI பின்

புதிய AI சாதனத்தை உருவாக்கியிருக்கும் முன்னாள் ஆப்பிள் ஊழியர்கள்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 01, 2023
11:06 am

செய்தி முன்னோட்டம்

முன்னாள் ஆப்பிள் ஊழியர்களான இம்ரான் சௌத்ரி மற்றும் பெத்தனி போன்ஜோர்னோ ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய 'ஹ்யூமேன்' (Humane) ஸ்டார்ட்அப்பானது இந்த ஆண்டு தொடக்கத்தில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியைத் திரட்டியிருந்தது. தற்போது, தங்களது முதல் தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது இந்த ஹ்யூமேன் ஸ்டார்ப்அப் நிறுவனம். ப்ரொஜெக்டட் டிஸ்பிளே மற்றும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 'AI பின்' என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹ்யூமேன். நமது சட்டையில் உள்ள பாக்கெட்டில் மாட்டிக் கொள்ளும் வகையில் சிறிய அளவில் இருக்கும் இந்த AI பின்னானது, ஒரு ஸ்மார்ட்போன் செய்யக்கூடிய செயல்களைச் செய்யும் திறனைக் கொண்டுக்கும், எனத் தெரிவித்திருக்கிறார் இதனை உருவாக்கிய ஹ்யூமேன் நிறுவனத்தின் துணை நிறுவனரான இம்ரான் சௌத்ரி.

கேட்ஜட்ஸ்

ஹ்யூமேனுடன் கைகோர்க்கும் பெருநிறுவனங்கள்: 

இந்த குட்டி சாதனத்தில் கீபோர்டு கிடையாது, டிஸ்பிளே கிடையாது, நம்முடைய குரலைப் பயன்படுத்த மட்டுமே இதனை இயக்க முடியும். இந்த சாதனம் நமக்குக் காட்டும் தகவல்களைப் பார்க்க வேண்டும் என்றால், நமது கைகளை இதன் ப்ரொஜெக்டட் டிஸ்பிளேயின் முன்னாள் காட்ட வேண்டும். இந்த குட்டி சாதனத்திற்கான பிரத்தியேகமான சிப்பை தயாரிக்க குவால்காம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது ஹ்யூமேன். கிளவுடு வசதியின் மூலம் இயங்கும் இந்த சாதனத்திற்கு கிளவுடு சேவையை வழங்கவிருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். SK நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்த சாதனத்தை உலகம் முழுவதும் விநியோகிக்க பொறுப்பேற்றிருக்கிறது. தங்களுடைய ஸ்மார்ட் ஹோம் சாதங்களங்களில், இதனைப் பொருத்த LG நிறுவனம் முன்வந்திருக்கிறது. தங்களுடைய கார்களில் இந்த புதிய சாதனத்தை பயன்படுத்த ஹ்யூமேனுடன் கைகோர்த்திருக்கிறது வால்வோ.