AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா!
இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தான். டெக்ஸ்ட்டை உருவாக்கும் கொண்ட சாட்ஜிபிடி, பார்டு AI போன்ற கருவிகளாக இருந்தாலும் சரி, புகைப்படங்களைக் உருவாக்கும் டால்.இ, மிட்ஜர்னி போன்ற AI கருவிகளாக இருந்தாலும் சரி, அவை இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு புதிய விவாதத்தையும் எழுப்பியிருக்கின்றன. இணையத்தில் பகிரப்படும் புகைப்படங்களை இனி என்னால் நாம் நம்பலாமா? இந்த விவாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய ட்வீட் ஒன்றையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா. பிரபல செய்தி வலைத்தளத்தில் ஆனந்த மஹிந்திரா இந்தியத் தெருக்கிளில் ஹோலி கொண்டாடுவது போலான புகைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆனந்த் மஹிந்திராவின் ஹோலி புகைப்படம்:
அந்தப் புகைப்படத்தை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், 'இந்தப் புகைப்படத்தை உருவாக்கியவரிடம் நான் செல்ல விரும்பும் இடங்களுக்கு நான் சென்றது போலான புகைப்படங்களைப் உருவாக்கச் சொல்லி கேட்க வேண்டும்', என அந்தப் புகைப்படம் குறித்த தன்னுடைய கருத்தைப் பதிவிட்டிருக்கிறார் அவர். 'போலியான புகைப்படங்களை AI தொழில்நுட்பங்கள் எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கின்றன' என எச்சரிக்கும் தொனியிலும் கருத்தப் பதிவிட்டிருக்கும் அவர், 'எதிர்காலம் பயத்தை ஏற்படுத்துகிறது' என தன் குறிப்பிட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் போப் பிரான்சிஸ் மற்றும் ஒபாமா ஆகியோருடைய AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தன. அவை உண்மையா போலியா எனக் கண்டறிய முடியாத வகையில் இணைய வாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.