Page Loader
இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி!
இந்தியாவிலும் வெளியானது சாட்ஜிபிடியின் IOS செயலி

இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி!

எழுதியவர் Prasanna Venkatesh
May 26, 2023
11:11 am

செய்தி முன்னோட்டம்

கடந்த மே 18-ம் தேதி அமெரிக்காவில் சாட்ஜிபிடியின் IOS செயலியை வெளியிட்டதைத் தொடர்ந்து, நேற்று மேலும் 12 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். தற்போது இந்தியா உள்ளிட்ட மேலும் 30 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ. இந்த புதிய சாட்ஜிபிடி செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் IOS பயனர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வெப் வெர்ஷனைப் போலவே நம்முடைய சாட் வரலாறை இந்த செயலியில் நாம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், நம்முடைய சாட்டை ஓபன்ஏஐ நிறுவனம் அதன் சாட்பாட்டை மேம்படுத்த பயன்படுத்த கூடாதெனில் அதனை டிஸ்ஏபில் செய்யும் வசதியும் இந்த செயலியில் அளிக்கப்பட்டிருக்கிறது. சாட்ஜிபிடி ப்ளஸூக்கு அப்கிரேடு செய்யும் ஆப்ஷனை இந்த செயலியில் ரூ.1,999-ல் இந்திய பயனாளர்களுக்கு வழங்கியிருக்கிறது ஓபன்ஏஐ.

Embed

Twitter Post

ChatGPT iOS app is rolling out to 30+ more countries today!