Page Loader
க்ரோம் மற்றும் சஃபாரியிலும் பிங் சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்
க்ரோம் மற்றும் சஃபாரியிலும் பிங் சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்

க்ரோம் மற்றும் சஃபாரியிலும் பிங் சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 25, 2023
01:31 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த மே மாதம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பிங் சாட்பாட்டை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்தது மைக்ரோசாஃப்ட். ஆனால், அதனை மைக்ரோசாப்ட் சொந்த தேடுபொறியான எட்ஜில் மட்டுமே பயன்படுத்த முடிந்து வந்தது. மாறாக, சாட்ஜிபிடி மற்றும் கூகுள் பார்டு ஆகிய AI சாட்பாட்களை அனைத்து தேடுபொறிகளிலும் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனங்கள் அளித்திருந்தன. தற்போது பிங் சாட்பாட்டையும், கூகுளின் க்ரோம் மற்றும் ஆப்பிளின் சஃபாரி ஆகிய தேடுபொறிகளில் வழங்கவிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இது குறித்து அந்நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் கெய்ட்லின் ரௌஸ்லெட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, "சஃபாரி மற்றும் க்ரோமில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே தற்போது இந்த வசதியை வழங்கியிருக்கிறோம். கூடிய விரைவில் இதனை விரிவுபடுத்துவோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பிங் சாட்பாட்

வரம்புகளுடன் கூடிய பிங் சாட்பாட்:

க்ரோம் மற்றும் சஃபாரியில் பிங் சாட்பாட்டை பயன்படுத்தும் வசதியை மைக்ரோசாஃப்ட் வழங்கினாலும், எட்ஜ் தேடுபொறியில் பயன்படுத்தும் அளவிற்கு அனைத்து வசதிகளையும் கொடுக்காமல், சில வரம்புகளுடனேயே அறிமுகப்படுத்தவிருக்கிறது மைக்ரோசாஃப்ட். எட்ஜில் 4,000 வார்த்தைகள் வரை அறிவுறுத்தல்களைக் கொடுக்க முடியும் நிலையில், பிற தேடுபொறிகளில் அதனை 2,000 வார்த்தைகள் என்ற அளவிற்கு சுருக்கியிருக்கிறது. மேலும், எட்ஜில் பிங் சாட்பாட்டைப் பயன்படுத்தும் போது, ஒரு முறையில் 30 சாட்கள் வரை செய்து கொள்ள முடியும். ஆனால், பிற தேடுபொறிகளில் இதனை வெறும் 5 ஆகக் குறைத்து வழங்கவிருக்கிறது மைக்ரோசாஃப்ட். எனினும், டார்க் மோடு உள்ளிட்ட சில வசதிகளை அனைத்து தேடுபொறிகளிலும் வழங்கப்படும் பிங் சேவைகளிலும் வழங்கவிருக்கிறது அந்நிறுவனம்.