'ஜெனிசிஸ்' துணையுடன், செய்திகள் எழுத தயாராகும் கூகிள்
பல நிறுவனங்கள், தங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுவதற்கும், சந்தையில் முன்னணி இடத்தை தக்கவைத்து கொள்வதற்கும் உபயோகித்து வருவது, AIசெயலிகளை. முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான, மைக்ரோசாப்ட் & மெட்டா போன்றவை, தங்கள் சாட்பாட்களை சந்தையில் இறக்க, போட்டி நிறுவனமான கூகிள் ஒருபடி மேலே சென்று, 'ஜெனிசிஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புராடெக்டை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெனிசிஸ், உலக நடப்புகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி, தானே ஒரு செய்திக் கட்டுரையாக உருவாக்கும் திறன் கொண்டது என செய்திகள் தெரிவிக்கின்றன. பல எழுத்தாளர்கள் இது தங்களுக்கு மாற்றாகி விடுமோ என அச்சத்தில் இருக்கையில், இந்த செயலி அவர்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் மட்டுமே என கூகிள் உத்தரவாதம் அளித்துள்ளது.