ஓபன்ஏஐயிடம் இருந்து எலான் மஸ்க்கிடம் சென்ற ai.com டொமைன் பெயர்
Ai.com என்ற டொமைன் பெயரானது ஓபன்ஏஐ நிறுவனத்திடம் இருந்து எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்திற்கு கைமாறியிருக்கிறது. முன்னர் ai.com என்ற டொமைன் பெயரைப் பயன்படுத்தினால், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தளத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும். ஆனால், தற்போது எலான் மஸ்க்கின் x.ai தளத்திற்குக் கூட்டிச் செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவு நிறுவனமக xAI என்ற நிறுவத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார் எலான் மஸ்க். xAI, X கார்ப்பின் ஒரு அங்கம் இல்லை என தங்கள் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். எனினும், X (ட்விட்டர்) நிறுவனத்துடன் இணைந்து செயல்படவிருப்பதாகவும் தங்கள் வலைத்தளப் பக்கத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கையமாறிய டொமைன் பெயர்:
இரண்டே எழுத்துக்களைக் கொண்டிருப்பது, பயனர்களிடம் எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையிலும் இருப்பதன் காரணமாக, ai.com என்ற டொமைன் பெயருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த டொமைன் பெயரின் மதிப்பு 11 மில்லியன் டாலர்கள் எனக் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எலான் மஸ்க் இந்த டொமைனை எவ்வளவு தொகைக்கு வங்கியிருக்கார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. முதலில், அந்த டொமைன் பெயரை எலான் மஸ்க் வாங்கியிருக்கிறார என்பது குறித்து குழப்பமே நீடிக்கிறது. X என ட்விட்டரின் பெயரை மாற்றிய பிறகு, X தொடர்பான அனைத்து பெயர்களையும் தனதாக்கி வருகிறார் எலான் மஸ்க். அதன் ஒரு பகுதியாகவே இந்த மாற்றமும் பார்க்கப்படுகிறது.