
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!
செய்தி முன்னோட்டம்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக காங்கிரஸின் முன்பு நேற்று ஆஜரானார்.
AI குறித்தும், அதன் சாதக பாதகங்கள் குறித்து காங்கிரஸிற்கு விளக்கிச் சொல்ல இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் சாம் ஆல்ட்மேன்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொரு செயலையும் மேம்படுத்தும் என்ற நம்பிக்கையுடனே ஓபன்ஏஐ நிறுவனம் செயல்படத் துவங்கியது, ஆனால் அதே தொழில்நுட்பங்களால் தீவிரமான எதிர்மறை விளைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, எனத் தெரிவித்திருக்கிறார் ஆல்ட்மேன்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களால் காலநிலை மாற்றம், கேன்சர் போன்ற கடினமான செயல்களுக்கும் தீர்வுகளை கண்டறிய முடியும். ஆனால், அதே சமயம் அவற்றுக்கு கடிவாளம் போடுவதும் அவசியம்.
செயற்கை நுண்ணறிவு
சாம் ஆல்ட்மேனின் வாக்குமூலம்:
உலக நாடுகளுடன் சேர்ந்து, AI-களுக்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் அமெரிக்கா முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான சட்டங்களை உருவாக்கி, அவை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு வரவிருப்பதை சுட்டிக்காட்டினார் செனட்டர் ஒருவர்.
ஜெனரேட்டிவ் AI-களான சாட்ஜிபிடி மற்றும் டால்-இ உள்ளிட்ட AI-களுக்கு சிறப்பு வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் அவசியம் என சுட்டிக்காட்டியிருக்கிறது காங்கிரஸ். அவை உருவாக்கும் புகைப்படங்களிலும், பதில்களிலும், அவை இயந்திரத்தால் உருவாக்கப்பட்டவை என்பதைக் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.
இந்த தொழில்நுட்பங்களால் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள முடியாது. அப்படி ஒரு கண்டுப்பிடிப்பு தற்போது தேவையும் இல்லை, எனத் தெரிவித்திருக்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் எமரிட்டஸ் கேரி மார்க்கஸ்.