Page Loader
சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!
சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட புதிய AI ஆராய்ச்சி மையம்

சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 16, 2023
03:03 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ஐஐடியின் Centre for Responsible AI (CeRAI) ஆராய்ச்சி மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அந்த ஆராய்ச்சி மையத்தின் முதல் கருதரங்கு நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கானது நெறிமுறை மற்றும் பொறுப்புடன் கூடிய AI சார்ந்த தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் 'Responsible AI for India' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது. கூகுள் நிறுவனம் சுமார் 1 மில்லியன் டால்களை இந்த ஆராய்ச்சி மையத்திற்கு அளித்திருக்கிறது. AI-யின் அடிப்படை மற்றும் பயன்நோக்கு ஆராய்ச்சிகளுக்கான தேசிய மற்றும் உலகளாவிய ஆராய்ச்சி மையமாத் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் திறக்கப்பட்டிருக்கிறது இந்த ஆராய்ச்சி மையம்.

சென்னை

செயல்பாடுகள் என்ன?

ஒவ்வொரு துறையில் AI சார்ந்த விஷயங்களை எந்த விதத்தில் அணுகலாம் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும், பரிந்துரைகளையும் இந்த ஆராய்ச்சி மையம் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் எனத் தெரிவித்திருக்கிறது CeRAI. மேலும், தற்போது உருவாக்கப்பட்டுவரும் மற்றும் பயன்பாட்டில் இருக்கும் AI தொழில்நுட்பங்களை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் தேவையான AI சிஸ்டங்களையும் கருவிகளையும் இந்த ஆராய்ச்சி மையம் வழங்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும், AI குறித்து பல்வேறு குழப்பங்களை தெளிவுபடுத்தும் வகையிலும், அது குறித்து மற்றவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதனை எப்படி நெறிமுறைகள் மற்றும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பகிர்ந்து கொள்ள பல்வேறு தொழில்நுட்ப கருத்தரங்களை நடத்தவிருப்பதாவும் தெரிவித்திருக்கின்றனர்.