Page Loader
லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்.. எப்படி இயங்குகிறது?
லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்

லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்.. எப்படி இயங்குகிறது?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 01, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில மாதங்களாக மென்பொருட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தற்போது வன்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம், கேமாரவின் லென்சுக்கு பதிலாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாராகிராபிகா என்ற லென்ஸ் இல்லாத கேமராவை உருவாக்கியிருக்கியிருக்கின்றனர். நமது இருப்பிடத் தகவல்கள் மற்றும் AI தொழில்நுட்பம் இரண்டையும் கொண்டு புகைப்படங்களை உருவாக்குகிறது இந்த புதிய AI கேமரா. வெறும் பார்வை மூலம் மட்டுமல்லாது வேறு ஒரு கோணத்தில் இந்த உலகை காண்பதற்காக இந்த கேமராவை உருவாக்கியிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் எப்படி இந்த உலகைப் பார்க்கின்றன என்பதையும் இந்த கேமராவின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும், எனக் குறிப்பிட்டிருக்கிறார் இதனை உருவாக்கிய ஜோர்ன் கார்மன்.

செயற்கை நுண்ணறிவு

எப்படி இயங்குகிறது: 

இந்த AI கேமரா எப்படி இயங்குகிறது என்பதனை தனி இணையப்பக்கதில் விவரித்திருக்கிறார் கார்மன். முதலில் இந்த கேமரா இயங்குவதற்கு GPS, இணைய வசதி உள்ளிட்டவை தேவை. இணையம் மற்றும் GPS-ஐ பயன்படுத்தி நாள், நேரம், இருப்பிடம் குறித்த தகவல்கள், அன்றைய வானிலை, வெப்ப அளவு மற்றும் நாம் இருக்கும் இடத்தில் என்ன விதமான நிகழ்வுகள் நடக்கின்றன என்பது குறித்த தகவல்களை சேகரித்துக் கொள்கிறது. பின்னர் சேகரித்த தகவலை ஒரு நாம் புகைப்படம் எடுக்க விரும்பும் இடம் எப்படியானது என்பதை வார்த்தைகளால் விவரிக்கிறது. பின்னர், அதனைக் கொண்டு ஒரு புகைப்படத்தை உருவாக்குகிறது. இதனை விர்சுவலாக பயன்படுத்தி பார்க்கவும் வசதியையும் இணையப் பயனர்களுக்கு அளித்திருக்கிறார். (paragraphica.bjoernkarmann.dk/) இந்தப் பக்கத்திற்கு சென்று விர்சுவலாக இந்த கேமராவை பயன்படுத்தலாம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post