Page Loader
கடும் நிதிநெருக்கடி; 2024இல் சாட்ஜிபிடி நிறுவனம் திவாலாகும் என கணிப்பு
2024இல் சாட்ஜிபிடி நிறுவனம் திவாலாகும் என கணிப்பு

கடும் நிதிநெருக்கடி; 2024இல் சாட்ஜிபிடி நிறுவனம் திவாலாகும் என கணிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2023
03:33 pm

செய்தி முன்னோட்டம்

சாம் ஆல்ட்மேன் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அனலிடிக்ஸ் இந்தியா இதழின் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் நிதி நிலைமை மேம்படவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஓபன் ஏஐ திவால் நிலையை சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் தயாரிப்புகளில் ஒன்றான சாட்ஜிபிடியை இயக்குவதற்கான குறிப்பிடத்தக்க தினசரி செலவுதான் என்று கூறப்படுகிறது. சாட்ஜிபிடியை மட்டும் இயக்குவதற்கு ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5.80 கோடியை ஓபன் ஏஐ நிறுவனம் செலவு செய்வதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ChatGPT trying to generate income

சாட்ஜிபிடி மூலம் வருமானம் ஈட்ட முயற்சிக்கும் ஓபன் ஏஐ

சாட்ஜிபிடி ஆரம்பத்தில் இலவசமாக இயங்கி வந்தாலும், வெர்ஷன் 3.5 மற்றும் 4 உள்ளிட்ட அதன் சில மாடல்களை பிரீமியம் முறையில் வழங்கி வருமானம் ஈட்டும் முயற்சியில் ஓபன் ஏஐ நிறுவனம் உள்ளது. எனினும், சமீபத்திய மாதங்களில் சாட்ஜிபிடியில் பயனர் ஈடுபாடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை 2023 இறுதிக்குள், சாட்ஜிபிடியின் பயனர் தளம் ஜூன் மாதத்தில் 1.7 பில்லியனில் இருந்து 1.5 பில்லியன் பயனர்களாக 12% வரை ஜூலையில் குறைந்துள்ளது. இந்நிலையில், அனலிடிக்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சாட்ஜிபிடியின் இழப்பு $540 மில்லியனாக இரட்டிப்பாகியுள்ளது. மேலும், பெருகிவரும் இழப்புகளின் அடிப்படையில் 2024இல் நிதிநிலை இன்னும் மோசமாகி திவால் நிலையை எட்டலாம் என அறிக்கையில் எச்சரித்துள்ளது.