Page Loader
IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI
IOS இயங்குதளத்திற்கான சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ

IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI

எழுதியவர் Prasanna Venkatesh
May 25, 2023
02:49 pm

செய்தி முன்னோட்டம்

IOS-க்கான சாட்ஜிபிடி செயலியை பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 12 நாடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம். இதுவரை ப்ரௌசர்களில் பயன்படுத்தும் சாட்ஜிபிடி வெர்ஷன் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த மே 18-ம் தேதி ஐபோன்களுக்கான சாட்ஜிபிடி செயலியை முதலில் அமெரிக்காவில் வெளியிட்டது ஓபன்ஏஐ. தற்போது மேலும் 12 நாடுகளுக்கு அந்த சேவையை விரிவுபடுத்தியிருக்கிறது. இனி வரும் நாட்களில் பிற நாடுகளுக்கும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான சாட்ஜிபிடி வெர்ஷனையும் வெளியிடுவோம் என அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம். ப்ரௌசரில் சாட்ஜிபிடி ப்ளஸ் வசதியைக் கொண்டவர்கள், செயலியும் அதனை அப்படியே தொடரலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது ஓபன்ஏஐ. டெக்ஸ்ட்-டூ-இமேஜ் சேவையான டால்இ-யின் IOS செயலியையும் ஓபன்ஏஐ நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Embed

Twitter Post

ChatGPT app for iOS now in