NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பிங் தேடுபொறியுடன் இணைய வசதியைப் பெறும் சாட்ஜிபிடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிங் தேடுபொறியுடன் இணைய வசதியைப் பெறும் சாட்ஜிபிடி
    இணையத்தை அணுகும் வசதியைப் பெறுகிறது சாட்ஜிபிடி

    பிங் தேடுபொறியுடன் இணைய வசதியைப் பெறும் சாட்ஜிபிடி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 28, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு நவம்பரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்ஜிபிடி சாட்பாட்டை வெளியிட்டது ஓபன்ஏஐ. அப்போது சாட்ஜிபிடிக்கு போட்டியாக வேறு எந்த சாட்பாட்டும் சந்தையில் இல்லை.

    ஆனால், தற்போது சாட்ஜிபிடி-யை விட அதிக வசதிகளுடன் கூகுளின் பார்டு சாட்பாட் களத்திலிருக்கிறது.

    செப்டம்பர் 2021 வரையிலான தகவல் தளத்தை மட்டுமே கொண்டு சாட்ஜிபிடி செயல்பட்டு வரும் நிலையில், நிகழ் நேரத் தகவல்களை இணையதளத்தில் தேடி எடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது கூகுளின் பார்டு.

    எனவே, தற்போது பார்டுடன் போட்டியிடும் வகையில் பிங் தேடுபொறியின் உதவியுடன் இணையதளத்தை அணுகும் வசதியை சாட்ஜிபிடிக்கு கொடுத்திருக்கிறது ஓபன்ஏஐ.

    கடந்த மாதம் வெளியிட்ட சாட்ஜிபிடியின் ஐஓஎஸ் செயலியில் இந்தக் கூடுதல் வசதியைக் கொடுத்திருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

    சாட்ஜிபிடி

    மைக்ரோசாப்ட்-ஓபன்ஏஐ ஒப்பந்தம்: 

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது மைக்ரோசாப்ட் நிறுவனமானது பலபில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. எனவே, சாட்ஜிபிடியில் முதன்மையான மற்றும் ஒரே தேடுபொறியாக பிங் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த புதிய வசதியுடன், புத்துணர்ச்சியைப் பெற்றிருக்கிறது சாட்ஜிபிடி. இனி, சமீபத்தில் தகவல்கள் அல்லது நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கும் நிகழ் நேரத் தகவல்களைப் பெற்று சாட்ஜிபிடியால் பதிலளிக்க முடியும்.

    ஆனால், இந்த வசதியை சாட்ஜிபிடியின பிளஸ் சேவைக்கு சந்தா செய்திருப்பவர்களுக்கு மட்டுமே வெளியிட்டிருக்கிறது ஓபன்ஏஐ. இலவச சாட்ஜிபிடி பயனர்களால் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது.

    சாட்ஜிபிடியின் பிளஸ் சேவைக்கு சந்தா செய்தவர்கள், அதன் செட்டிங்ஸ் பகுதியில் புதிய அம்சங்களின் கீழ் இடம்பெற்றிருக்கும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு
    கூகுள்

    சமீபத்திய

    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு

    சாட்ஜிபிடி

    டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா! ஏர் இந்தியா
    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை வைரல் செய்தி
    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன? செயற்கை நுண்ணறிவு
    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை! சாட்ஜிபிடி
    தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்!  சாம்சங்
    ப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்! சாட்ஜிபிடி
    ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி! சாட்ஜிபிடி

    கூகுள்

    பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு! செயற்கை நுண்ணறிவு
    தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்! ஸ்மார்ட்போன்
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    AI வசதியுடன் கூடிய தேடுபொறி சேவை.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்!  மைக்ரோசாஃப்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025