இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
GE நிறுவனத்துடன் $1 பில்லியன் போர் ஜெட் எஞ்சின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா
113 GE-404 என்ஜின்களை வழங்குவதற்காக, அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் (GE) உடன் அடுத்த மாதம் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முனைப்பில் இந்திய அரசாங்கம் உள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்கள் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்: மகா., அரசு சட்டமியற்ற திட்டம்
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு பரிசீலித்து வருகிறது.
தவெக மாநாட்டில் பவுன்சர்கள் செய்த காரியத்தால் தலைவர் விஜய் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு
மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று மிகுந்த கோலாகலமாக நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மாநில மாநாட்டில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் ஆர்வம் காரணமாக ஏற்பட்ட குழப்பம் தற்போது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடும் மழை: வைஷ்ணோ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 31 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி யாத்திரைப் பாதையில் புதன்கிழமை பெய்த கனமழையின் போது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.
சமீபத்திய வாரங்களில் டிரம்பின் அழைப்புகளை பிரதமர் மோடி 4 முறை நிராகரித்துள்ளாராம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய வாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச குறைந்தது நான்கு முறை முயற்சித்தார் எனவும், ஆனால் பிரதமர் அவருடன் பேச மறுத்துவிட்டதாக ஜெர்மன் செய்தித்தாள் பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரதட்சணை மரணங்கள் பாலியல் கொலைகளை விட 25 மடங்கு அதிகம்: NCRB
இந்தியாவில் வரதட்சணை மரணங்கள், பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டுப் பலாத்காரத்திற்குப் பிறகு கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன.
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை இறக்கும் இந்திய கடற்படை
இந்திய கடற்படை, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு ஸ்டெல்த் போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகியவற்றை இயக்கியுள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான வந்தாரா கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன: டிரம்ப் புதிய கூற்று
மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலின் போது ஏழு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதோடு, போர் நிறுத்தம் தாம் நடத்திய மத்தியஸ்த முயற்சியின் விளைவாகத்தான் நடந்தது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும் (ஆகஸ்ட் 26), நாளையும் (ஆகஸ்ட் 27) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் உட்பட 45 பேருக்கு அறிவிப்பு
கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்புச் செய்து, மாணவர்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் ஆசிரியர்களைப் பாராட்டவும், கௌரவிக்கவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 5 அன்று வழங்கவுள்ளார்.
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மாணவர்களே அலெர்ட்; GATE 2026 விண்ணப்பப் பதிவுக்கான தேதிகள் மாற்றம்
பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) 2026 ஐ நடத்தும் நிறுவனமான இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கௌஹாத்தி, தேர்வுக்கான பதிவு அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்; விவசாயிகள் நலனே முக்கியம் என பிரதமர் மோடி உறுதி
உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் பேசுகையில், சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலன்களுக்குத் தமது அரசு ஒருபோதும் தீங்கு வர விடாது என்று உறுதியளித்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை(ஆகஸ்ட் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஜம்மு காஷ்மீரில் பென் டிரைவ் மற்றும் வாட்ஸ்அப்பிற்குத் தடை விதிப்பு
சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜம்மு காஷ்மீர் அரசு, அனைத்துத் துறைகளிலும் பென் டிரைவ்களைப் பயன்படுத்தவும் மற்றும் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட பொதுச் செய்தியிடல் தளங்களைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சேவைகள் இனி வாட்ஸ் அப்பில்! ஒரே எண்ணில் 50 சேவைகள்- சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்
தமிழக மக்களுக்கு அரசுத் துறைகள் வழங்கும் 50 முக்கிய சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாக பெறும் புதிய சேவையை சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா இன்று ரிப்பன் மாளிகையில் இந்த சேவையை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா மற்றும் பிஜி உறுதி
பிரதமர் நரேந்திர மோடியும், பிஜியின் பிரதமர் சித்திவேனி லிகாமமாடா ரபுகாவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை: தமிழக அரசு எச்சரிக்கை
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆகஸ்ட் 25) திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
சும்மா ஏதாச்சும் சொல்லக்கூடாது: முன்னாள் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் ராஜினாமா குறித்து அமித் ஷா
இந்திய துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.
நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் பெண்ணின் மைத்துனர் கைது; மாமனாருக்கும் வலைவீச்சு
நொய்டாவில் வரதட்சணை தொடர்பான நிக்கி பாட்டியின் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், நொய்டா காவல்துறை திங்கள்கிழமை அவரது மைத்துனரை கைது செய்தது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நுரையீரல் தொற்று பாதிப்பு: சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
"எங்களுக்கு எது லாபமோ அங்கேருந்து எல்லாம் எண்ணெய் வாங்குவோம்": ரஷ்யாவுக்கான இந்திய தூதர்
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை அதிகரித்த போதிலும், "சிறந்த ஒப்பந்தத்தை" வழங்கும் மூலங்களிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும் என்று ரஷ்யாவிற்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
தமிழ்நாட்டில் எந்தப் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
வரதட்சணை கொலை: கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது காவல்துறை என்கவுன்ட்டர்
ஒரு பயங்கரமான வரதட்சணை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) பிற்பகல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிர்சா சௌக் அருகே உத்தரபிரதேச போலீசாரால் நடந்த என்கவுன்ட்டரில் காலில் சுடப்பட்டார்.
முன்னாள் சிஆர்பிஎஃப் தலைவர் அனிஷ் தயால் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) முன்னாள் தலைமை இயக்குநரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அனிஷ் தயால் சிங், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (Deputy NSA) நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா; ராஜ்நாத் சிங் அறிவிப்பு
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு மேலும் ஒரு பெரிய உந்துதலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்; பிரதமர் மோடி தகவல்
இந்தியாவின் தொழில்நுட்ப இலக்கு குறித்து முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று தி எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் பேசும்போது வெளியிட்டார்.
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்
மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர், வாட்ஸ்அப் வழியாக வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால் ₹1.9 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
சட்டவிரோத ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை கைது செய்துள்ளது.
எந்தவொரு அமெரிக்க அதிபரும் இப்படி இருந்ததில்லை; டிரம்ப் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெளியுறவு கொள்கை இதுவரை இல்லாத வகையில் அசாதாரணமானதாக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தர்மசாலா சர்ச்சையில் புகாரளித்தவர் பொய் சாட்சியம் அளித்ததாகக் கூறி அதிரடியாக கைது;
கர்நாடகாவில் உள்ள தர்மசாலா கிராமத்தில் கூட்டுப் புதைகுழிகள் உள்ளதாகக் கூறி, அதை அம்பலப்படுத்தியதாகக் கூறிக்கொண்ட சி.என்.சின்னையா என்கிற சென்னா, தற்போது பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ரயில் சேவையைப் பெறும் மிசோரம்; செப்.13இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
மிசோரம் மாநிலம் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக ரயில் சேவையைப் பெற உள்ளது.
111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்: இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டது
இந்தியாவின் முதல் கடல் பாலமான, 111 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டரை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கிக்கு இழப்பை ஏற்படுத்திய வழக்கில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், அதன் தலைவர் அனில் அம்பானியும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) ரூ. 2,000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வங்கி மோசடி தொடர்பாக, சிபிஐ சனிக்கிழமை அன்று சோதனை நடத்தியது.
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் இந்தியா; ராஜ்நாத் சிங் தகவல்
இந்தியா தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) அறிவித்தார்.
வருமான வரி சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்; 2026 முதல் அமலுக்கு வருகிறது
வருமான வரிச் சட்ட சீர்திருத்தத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார்; ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமானது
ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றதன் மூலம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) சட்டமாக அமலுக்கு வந்தது.
தமிழகத்தின் ஆபத்தான நிலச்சரிவு மண்டலங்களை வெளிப்படுத்திய புதிய GSI மேப்பிங்
தமிழ்நாட்டில் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் நிலச்சரிவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) அடையாளம் கண்டுள்ளது.