LOADING...
சமீபத்திய வாரங்களில் டிரம்பின் அழைப்புகளை பிரதமர் மோடி 4 முறை நிராகரித்துள்ளாராம்
பிரதமர் அவருடன் பேச மறுத்துவிட்டதாக ஜெர்மன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது

சமீபத்திய வாரங்களில் டிரம்பின் அழைப்புகளை பிரதமர் மோடி 4 முறை நிராகரித்துள்ளாராம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 26, 2025
07:13 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய வாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச குறைந்தது நான்கு முறை முயற்சித்தார் எனவும், ஆனால் பிரதமர் அவருடன் பேச மறுத்துவிட்டதாக ஜெர்மன் செய்தித்தாள் பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் தெரிவித்துள்ளது. இது அவரது "[மோடியின்] கோபத்தின் ஆழத்தின் விளைவாகவும், அவரது எச்சரிக்கையின் விளைவாகவும்" இருப்பதாக செய்தித்தாள் கூறுயதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. பிரேசிலைத் தவிர வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத அளவுக்கு, டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50% வரிகளை விதித்தபோதும், பிரதமர் மோடியுடன் பேச ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா அபராதம் விதித்தது.

காரணம்

மோடி கோபப்பட சாத்தியமான காரணம் என ஊடகங்கள் கூறுவது இதைதான்

25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட இந்திய-அமெரிக்க உறவுகள், வர்த்தக உபரி என்று டிரம்ப் இந்தியாவை குறிவைத்ததன் மூலம் ஒரு மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. "இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும்" என்று டிரம்ப் ஊடகங்களிடம் குறிப்பிட்டார். தொடர்ந்து, டிரம்பின் "செத்த பொருளாதாரம்" என்ற கருத்தை மறைமுகமாக மறுத்த மோடி, உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா முன்னேறி வருவதாகக் கூறினார். டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் மோடி, இந்தியாவின் பொருளாதார நலன்களை சமரசம் செய்யாமல் டிரம்புடன் கூட்டுறவு உறவைப் பேணி வந்தார். ஆனால் தற்போது, மோடியை விட்டுக்கொடுக்க டிரம்ப் மீண்டும் மீண்டும் முயற்சித்ததே முக்கிய காரணம் என்று FAZ குறிப்பிட்டது.

வர்த்தக ஒப்பந்தம்

"டிரம்ப்பின் யுக்தி பலிக்கவில்லை"

முன்னதாக, டிரம்ப், அமெரிக்காவிற்கும் வியட்நாமுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பிரதிநிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டும் முன்னரே, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்தார். "மோடியும் அதே வலையில் விழ விரும்பவில்லை" என்று தற்போது FAZ கூறியது. "அமெரிக்காவின் உத்தி வேலை செய்யவில்லை, அமெரிக்கா சீனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் 'இந்தோ-பசிபிக்' சீரமைப்பு என்ற அமெரிக்க கருத்து சரிந்து வருகிறது." என அந்த செய்தி கூறுகிறது. நியூயார்க்கில் உள்ள நியூ ஸ்கூலில் உள்ள இந்தியா-சீனா நிறுவனத்தின் இணை இயக்குனர் ஃப்ரேசியரின் கூற்றுப்படி, சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை.

இந்தியா- பாக் போர்

தான் தலையிட்டு போர் நிறுத்தம் நடந்ததாக தம்பட்டம் அடிக்கும் டிரம்ப்

அதோடு, சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதலில் தான் மத்தியசாதம் செய்து தான் போர்நிறுத்தத்தை உறுதி செய்ததாக டிரம்ப் கூறியதை அடுத்து, இந்திய தரப்பில் கோபத்தை அதிகரித்துள்ளது. "பாகிஸ்தானுடன் எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். அது விஷயங்களை சிறப்பாக்கவில்லை" என்று அறிக்கை கூறியது. "பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிருக்கு, ஓவல் அலுவலகத்தில் பணி விருந்தில் டிரம்ப் விருந்தளித்தது கூட இந்தியாவில் ஒரு ஆத்திரமூட்டலாகக் கருதப்பட்டது," என்று அது மேலும் கூறியது.