LOADING...
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: 12-வது இந்து நபர் அடித்துக் கொலை
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: 12-வது இந்து நபர் அடித்துக் கொலை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2026
08:27 am

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷில் சமீபகாலமாக வெடித்துள்ள வன்முறை போராட்டங்களுக்கு இடையே, ஃபெனி மாவட்டத்தில் சமீர் குமார் தாஸ் (28) என்ற இந்து இளைஞர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார். ஆட்டோ ஓட்டுநரான இவரை தாக்கிய கும்பல், அவரிடமிருந்த வாகனத்தை பறித்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பங்களாதேஷில் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணத்தை தொடர்ந்து, அந்நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ளன. கடந்த வாரம் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். அதேபோல, கும்பல் தாக்குதலில் இருந்து தப்பிக்க கால்வாயில் குதித்த ஒரு நபரும் உயிருக்கு போராடி இறந்துள்ளார்.

தேர்தல்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் 

இந்துக்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் குறித்து 'பங்களாதேஷ் இந்து பௌத்த கிறித்தவ ஒற்றுமை கவுன்சில்' கடும் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு இந்துப் பெண் அதிகாரி அச்சுறுத்தப்பட்டதாகவும், பல இடங்களில் நகைக்கடைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசு, இச்சம்பவங்களை கண்டித்த போதிலும், இவை மதரீதியான தாக்குதல்கள் அல்ல என்றும், தற்செயலாக நடப்பவை என்றும் கூறிவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 12-ல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement