LOADING...
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் 'Gemini' AI; அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் 'Siri'
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் 'Gemini' AI

ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் 'Gemini' AI; அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் 'Siri'

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2026
08:45 am

செய்தி முன்னோட்டம்

தொழில்நுட்ப உலகின் இரு பெரும் போட்டியாளர்களான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டணியை அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை AI அம்சங்கள் மற்றும் அதன் டிஜிட்டல் உதவியாளரான 'சிரி' (Siri), இனி கூகுளின் 'ஜெமினி' (Gemini) தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும். தங்களது எதிர்காலத் திட்டங்களுக்கு கூகுளின் ஜெமினி தளம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என ஆய்வுக்குப் பின் ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கமாக தனது முக்கியத் தொழில்நுட்பங்களைச் சொந்தமாகவே உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம், தற்போது கூகுளுடன் கைகோர்த்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சந்தை

பலக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கூகிள் உடன் ஒப்பந்தம்

இந்த கூட்டணியின் மூலமாக ஆப்பிள் தனது AI உத்திகளை மீண்டும் வலுப்படுத்தும் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர். முன்னதாக ஓபன் ஏஐ (OpenAI) மற்றும் அந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களுடன் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பயனர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சாதனங்களில் இயங்கும் அடிப்படை AI அம்சங்களை 'ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்' (Apple Intelligence) தொடர்ந்து கவனிக்கும் என்றும், மேம்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே கூகுள் ஜெமினி பயன்படுத்தப்படும் என்றும் ஆப்பிள் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் புதுப்பிக்கப்பட்ட 'சிரி' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் சாதனங்களில் கூகுள் தேடுபொறியாக இருப்பதற்குப் பல பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் உள்ள நிலையில், தற்போது AI துறையிலும் இந்த உறவு நீடிக்கிறது.

Advertisement