
"எங்களுக்கு எது லாபமோ அங்கேருந்து எல்லாம் எண்ணெய் வாங்குவோம்": ரஷ்யாவுக்கான இந்திய தூதர்
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை அதிகரித்த போதிலும், "சிறந்த ஒப்பந்தத்தை" வழங்கும் மூலங்களிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும் என்று ரஷ்யாவிற்கான இந்திய தூதர் தெரிவித்தார். ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்ச்சியான எரிசக்தி வர்த்தகத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கும் வாஷிங்டனின் முடிவை பற்றி இந்திய தூதர் வினய் குமார், ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS உடன் பேசினார். "அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது" என்றும் வினய் குமார் கூறினார். "இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி பாதுகாப்பே எங்கள் நோக்கம், மேலும் ரஷ்யா மற்றும் பல நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு உலக எண்ணெய் சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவியுள்ளது" என்று அவர் TASS இடம் கூறினார்.
தேசிய நலன்
தேசிய நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசு முடிவு
இந்தியாவின் எரிசக்தி கொள்கை வெளிப்புற அரசியல் அழுத்தத்தால் அல்ல, மாறாக அதன் மக்களுக்கு நம்பகமான விநியோகங்களைப் பெறுவதன் அவசியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தூதர் வலியுறுத்தினார். "நாட்டின் தேசிய நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து எடுக்கும்" என்று குமார் கூறினார். "மேலும் வர்த்தகம் வணிக அடிப்படையில் நடைபெறுகிறது. எனவே வணிக பரிவர்த்தனை வர்த்தக இறக்குமதிகளின் அடிப்படை சரியாக இருந்தால், இந்திய நிறுவனங்கள் சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடத்திலிருந்து தொடர்ந்து வாங்கும். எனவே தற்போதைய நிலைமை இதுதான்," என்று அவர் மேலும் கூறினார். "எங்கள் வர்த்தகம் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பிற நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கின்றன," என்றும் அவர் தெரியவித்தார்.