LOADING...
தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு 
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே போல் மழை வாய்ப்பு நிலவுகிறது

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 26, 2025
08:49 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இன்றும் (ஆகஸ்ட் 26), நாளையும் (ஆகஸ்ட் 27) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே போல் மழை வாய்ப்பு நிலவுகிறது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரம் பகுதிகளில் தலா 5 செ.மீ., புவனகிரி மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்தது.

மழை

தமிழகத்தில் தொடரும் மழை 

வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, மாநிலத்தின் சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிவரை தொடரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 29-ஆம் தேதிவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.