
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நுரையீரல் தொற்று பாதிப்பு: சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அவர் தற்போது சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நல்லகண்ணு, கடந்த கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அதே நேரத்தில், வயது மூப்பு காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுவதாக நேற்று அறிக்கை வெளியானது. சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பு.
— Sun News (@sunnewstamil) August 25, 2025
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.… https://t.co/xKPEgKOFBI