LOADING...
தமிழக அரசு சேவைகள் இனி வாட்ஸ் அப்பில்! ஒரே எண்ணில் 50 சேவைகள்- சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்
மேயர் ஆர். பிரியா இன்று ரிப்பன் மாளிகையில் இந்த சேவையை தொடங்கி வைத்தார்

தமிழக அரசு சேவைகள் இனி வாட்ஸ் அப்பில்! ஒரே எண்ணில் 50 சேவைகள்- சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2025
05:38 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக மக்களுக்கு அரசுத் துறைகள் வழங்கும் 50 முக்கிய சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாக பெறும் புதிய சேவையை சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா இன்று ரிப்பன் மாளிகையில் இந்த சேவையை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். இந்த சேவைக்கு 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை சேமித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதன் மூலம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் இந்த சேவைகள் பெறலாம். இந்த திட்டம், தமிழக அரசு மற்றும் மெட்டா நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் அரசுத் துறைகளுக்கு நேரில் செல்லாமல், ஒரே சாட்பாட்டில் பல்வேறு சேவைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்

சேவைகள்

வாட்ஸ் அப் மூலம் பெறக்கூடிய முக்கிய சேவைகள்

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணச் செலுத்தல் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்கை / நீக்கம் முகவரி மாற்றம் இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெறல் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் சொத்து வரி, மின் கட்டணச் செலுத்தல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வர்த்தக லைசன்ஸ் விண்ணப்பம் பேருந்து டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து தமிழ்நாடு சுற்றுலா கழக படகு இல்ல முன்பதிவு