தொழில்நுட்பம்: செய்தி
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
இலவச பயனாளர்களுக்கான வசதிகளைக் குறைக்கும் ஸ்பாட்டிஃபை
இந்தியாவில் பிரபலமான மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுள் ஒன்றாக விளங்கும் ஸ்பாட்டிஃபை (Spotify) இலவச பயனாளர்களுக்கான சில வசதிகளைக் குறைத்திருக்கிறது.
நிலநடுக்கத்தைக் கண்டறியும் AI வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்
சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை தற்போது நிலநடுக்கத்தைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தியிருக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கருவிகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கும் அடோப்
தொழில்நுட்ப உலகின் பல்வேறு படிநிலைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் ஆதிக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாட்பாட்டாக தொடங்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, புகைப்படங்கள், எடிட்டிங் என பலவகைகளிலும் தற்போது உறுமாறியிருக்கிறது.
IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்?
தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் குறைவாக இருந்த போது, போன் தயாரிப்பில் கோலோச்சிய பெரு நிறுவனங்களுள் ஒன்று பிளாக்பெர்ரி (BlackBerry). கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2016ம் ஆண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பிலிருந்து விலகி சைபர் பாதுகாப்பு மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாறியது.
தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதைக் குறைக்க கூகுள் புதிய நடவடிக்கை
கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் அதிகப்படியான தேவையில்லாத மற்றும் சம்பந்தமில்லாத மின்னஞ்சல்களால் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் அனைவருமே அவதிப்பட்டிருப்போம். தேவையில்லாத மின்னஞ்சல்களுக்கு மத்தியில், நமக்குத் தேவையான மின்னஞ்சலைக் கூட சில நேரங்களில் தவற விட்டிருப்போம்.
ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள்
பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறாத தொழில்நுட்பங்கள் மற்றும் குறைந்த அளவிலான பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் பல்வேறு வசதிகளை நிறுத்தி வருகிறது கூகுள். அந்த வரிசையில் ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு வந்த 'அடிப்படை HTML' வசதியை நிறுத்தவிருக்கிறது கூகுள்.
பார்டு சாட்பாட்டில் 'நினைவு கொள்ளும்' புதிய வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
கடந்தாண்டு வெளியான உருவாக்க செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டிற்குப் போட்டியாக, தங்களுடைய பார்டு AI சாட்பாட்டை கடந்த மே மாதம் உலகமெங்கும் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தியது கூகுள்.
உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா
உலகளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது இந்தியா. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ உட்பட பல்வேறு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவில் டாப் 10 இடங்களைப் பிடித்திருக்கின்றன.
AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு!
ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தங்களுடைய வருடாந்திர நிகழ்வான மெட்டா கனெக்ட் நிகழ்வை நேற்று (செப்டம்பர் 27) நடத்தி முடித்திருக்கிறது மெட்டா.
அக்டோபரில் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களை வெளியிடும் குவால்காம்
அடுத்த மாதம் ஹவாயில் நடைபெறவிருக்கும் தங்களுடைய 'ஸ்னாப்டிராகன் சமிட்' நிகழ்வுக்காக தயாராகி வருகிறது குவால்காம் நிறுவனம். அக்டோபர் 24 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது ஸ்னாப்டிராகன் சமிட் நிகழ்வு.
'மெட்டா கனெக்ட்' நிகழ்வில் புதிய சாட்பாட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மெட்டா, என்ன ஸ்பெஷல்?
கடந்த ஆண்டு வரை வெறும், கேள்வி பதில் தொழில்நுட்பமாக மட்டுமே இருந்த சாட்பாட்கள் தற்போது வேறொரு வடிவத்தை அடைந்திருக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு.
உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்
ஒரு காலத்தில் மிகவும் பெரிதாக இருந்த சாதனங்கள் அனைத்தும் இன்று நம்முடைய உள்ளங்கைக்குள் அடங்கி விட்டன. தற்போது இதற்கு அடுத்தபடியாக, உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கும் வந்து கொண்டிருக்கின்றன இந்த சாதனங்கள்.
ஒரே அக்கௌன்ட், 5 ப்ரோஃபைல்கள்: வெளியானது ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்
ஃபேஸ்புக் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு
புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்களைக் கண்டறிவது எப்படி?
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களின் அளவு கடந்த சில மாதங்களில் அதிகரித்திருக்கிறது.
பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
விருதுநகரைச் சேர்ந்த இரண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுப்பிடிப்பு ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள். சக்தி பிரசாத் மற்றும் சக்தி பிரியன் ஆகிய இரு மாணவர்களும், இரத்த தானம் அளிப்பவர்கள் மற்றும் இரத்த வங்கிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரத்த வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சுவையை உருவாக்கிய கோகோ கோலா
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான சாட்ஜிபிடியின் வரவுக்குப் பின்பு, அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
தகவல் திருட்டுக்கு வாய்ப்பு, அனைத்து செயலிகள் மற்றும் மென்பொருட்களை அப்டேட் செய்ய வலியுறுத்தல்
நமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளில் உபயோகிக்கும் பல்வேறு மென்பொருட்களில் பயனர்களின் தகவல்களை பாதிக்கக்கூடிய கோளாறு ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தக் கோளாறானது, libwebp library-ஐ பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களிலும் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா
நிலவை ஆய்வு செய்ய சந்திரயானை திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, மனிதர்களைக் கொண்டு ஆழ்கடலை ஆய்வு செய்யும் 'சமுத்திரயான்' திட்டத்திற்குத் தயாராகி வருகிறது இந்தியா.
தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா?
உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறவிருக்கும் முதல் தேர்தலை இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அடுத்த ஆண்டு சந்திக்கவிருக்கின்றன.
Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை!
உலக நெட்டிசன்களின் வாழ்வின் புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்து விட்டிருக்கும் கூகுளுக்கு இன்று வயது நிறைவடைகிறது. ஆம், கூகுள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளுடன் கூடிய தேபொறி வசதியை முதல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது கூகுள். அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த வசதியை விரிவாக்கம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்
ரூ.17,000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வன்பொருட்கள் தயாரிப்பிற்கான PLI 2.0 (Production Linked Incentives) திட்டத்தினை கடந்த மே மாதம் அறிவித்தது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவிருக்கும் நத்திங்கின் துணை பிராண்டான CMF
ஒன்பிளஸ் பானியிலேயே புதிய திட்டங்களுடன் எலெக்ட்ரானிக் சாதனத் (கேட்ஜட்ஸ்) தயாரிப்புச் சந்தையில் களமிறங்கியது நத்திங்.
வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன அல்லது தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன.
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்
கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான 2%விஞ்ஞானிகள் பட்டியலினை அமெரிக்கா நாட்டினை சேர்ந்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான ஜான் லொன்னிடிஸும் அவரது குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம்
கடந்தாண்டு முதலே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவிலான பணிநீக்கத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்வதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் கூகுள் ஊழியர் ஒருவர்.
இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர்
ஜெர்மன் நாட்டின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர், வோல்கர் விஸ்ஸிங் பெங்களூருவில் உள்ள சாலையோரக் காய்கறிக் கடை ஒன்றில் யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்
ஆபத்து சமயங்களில் செயற்கைக்கோள் உதவியுடன் எச்சரிக்கைக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் கொடுக்கவிருக்கிறது கூகுள். இந்த வசதியை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஏற்கனவே இருக்கும் கூகுள் மெஸேஜஸ் வசதியுடன் இணைத்தே அளிக்கவிருக்கிறது கூகுள்.
இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் திட்டத்தின் கீழ், 18 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டு தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நீங்கள் அழுத்தும் key-இன் ஓசையை வைத்தே உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறியும் AI கருவிகள்
எந்தவொரு தொழில்நுட்பமும் ஆக்கத்திற்கு மட்டுமல்ல அழிவுக்கும் பயன்படும். அதற்கு ஒரு உதாரணமாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நூதன முறையில் பாஸ்வேர்டைக் கண்டறிய முடியும் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கின்றனர்.
இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி
இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.
இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி
இன்று உலகளவில் இந்தியா முன்னணியில் இருக்கும் துறைகளுள் ஒன்று விண்வெளித்துறை. இந்தத் துறையில் டாப் 10 நாடுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது இந்தியா.
ஜிமெயில் செயலியில் மொழிப்பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்
கூகுள் நிறுவனம் இதுவரை வலைத்தள வெர்ஷன்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த மொழிப்பெயர்ப்பு வசதியை, தற்போது ஜிமெயில் மொபைல் செயலியிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.
Slack செயலி முடக்கம்: உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த மெசேஜிங் ஆப் முடங்கியது
பிரபல பணியிட செய்தியிடல் செயலியான ஸ்லாக், உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இன்று மதியம் முடங்கியது.
சாட்டிலைட் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள்
ஆப்பிள் சமீபத்திய ஐபோனில் அவசர காலங்களில் தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் இருந்து கூட, சாட்டிலைட் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் அவசரகால குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது.
பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி
அறிவியலின்படி மனிதர்களாகிய நாம் பேசுவதற்கு நமது வாயைப் பயன்படுத்துகிறோம். வாய்ப் பகுதியில் இருக்கும் தசைகளை அசைத்து காற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒலியை உருவாக்கி அதனைக் கொண்டு பேசுகிறோம்.
'ஜெனிசிஸ்' துணையுடன், செய்திகள் எழுத தயாராகும் கூகிள்
பல நிறுவனங்கள், தங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுவதற்கும், சந்தையில் முன்னணி இடத்தை தக்கவைத்து கொள்வதற்கும் உபயோகித்து வருவது, AIசெயலிகளை.