இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி
இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன. இதனை மாற்றி, மருத்து தயாரிப்புலும் தன்னிறைடைய 1954-ல் ஹிந்துஸ்தான ஆண்டிபயாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நிறுவப்பட்டது. மருந்துத் தயாரிப்பை மேம்படுத்தும் பொருட்டு, National Chemicals Laboratory, Regional Research Laboratory Hyderabad மற்றும் Central Drug Research Institute ஆகிய அமைப்புகளும் நிறுவப்பட்டன. மருந்து தயாரிப்பிற்கு தேவையான அறிவு மற்றும் மனித வளத்தை வழங்குவதில் முக்கியப் பங்காற்றியது மத்திய அரசு.
இந்திய மருத்துவத் துறையின் வளர்ச்சி:
இன்று இந்தியாவிற்குத் தேவையான அனைத்து வகையான மருந்துகளையும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது இந்தியா. அது மட்டுமல்ல, பல்வேறு வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் உலக நாடுகளும் கூட மருந்துகளின் தேவைக்கு இந்தியாவின் இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பல்வேறு உலக நாடுகள், மருந்துகளின் தேவைக்கு இந்தியாவைச் சார்ந்திருப்பதற்கு, இந்தியா குறைந்த விலைகளில் மருந்துகளைத் தயாரிப்பது ஒரு காரணம். இன்று 'உலகின் மருந்தகம்' (Pharmacy of the World) என்று அழைக்கப்படுகிறது இந்தியா. உலகளாவிய பெருந்தொற்றாக கொரோனா உறுப்பெற்ற போது, சுயமாக தடுப்பூசிகளைக் கண்டறிந்து உருவாக்கிய நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. கொரோனாவுக்கான தடுப்பூசிகளைக் கண்டறிந்தது மட்டுமல்லாது, பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளுக்கும் அதனைக் குறைந்த விலையில் இந்தியா பகிர்ந்தளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணு ஆயுதம்:
உலகில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ஒன்பதே ஒன்பது நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களைய உருவாக்கி வந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியாவும் அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது. அணு ஆயுதங்களை பிற நாடுகள் உருவாக்க உலக நாடுகல் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், சொந்தமாக அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை உருவாக்கி 1974-ல் 'சிரிக்கும் புத்தா' என்ற பெயரில் முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது இந்தியா. 1998-ல் இரண்டானது அணு ஆயுத சோதனையையும் இந்தியா நடத்திய நிலையில், எக்காரணத்தைக் கொண்டு அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்ற கொள்கையையும் கடைப்பிடித்து வருகிறது இந்தியா.
பிற துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி:
1980-கள் வரை ஒவ்வொரு துறையிலும் அடித்தளத்தை பலமாக அமைத்து, 1980-களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையத் தொடங்கியது இந்தியா. சிறிய கண்டுபிடிப்புகள் முதல் பெரிய கண்டுபிடிப்புகள் வரை ஒவ்வொன்றும், இந்தியாவின் அந்தந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன. 1983-ல் அன்டார்டிகாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தை நிறுவியது இந்தியா. இந்தியாவில் தொலைத்தொடர்பு வசதிகளின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்காக C-DOT அமைப்பு 1984-ல் நிறுவப்பட்டது. 1986-ல் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான இந்திய ரயில்வே துறையில், பயணிகள் முன்பதிவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இது இந்தியாவின் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த இலக்கு:
1986-லேயே இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான ஹர்ஷாவும் பிறந்தது. இது இந்தியாவின் மருத்துவத் துறையில் ஒரு முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது. 1991-ல் சட்ட ரீதியிலான தீர்ப்பு வழங்க DNA கைரேகைகள் ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இது இந்தியாவில் தடயவியல் துறை மற்றும் மரபணு ஆராய்ச்சிகளின் மேம்பாடுகளுக்கு வித்திட்டது. இன்னும் பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற வேண்டியிரு்நதாலும், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா கடந்து வந்த பாதை மிகவும் அசாத்தியமானது. சுதந்திரத்திற்குப் பிறகு, 1960 மற்றும் 1970-களில் போடப்பட்ட விதைகள் இன்று மரமாகி நிற்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்தியா@100 என்ற இலக்கை நோக்கி தற்போது முன்னேறத் தொடங்கியிருக்கிறது இந்தியா.