Page Loader
ஒரே அக்கௌன்ட், 5 ப்ரோஃபைல்கள்: வெளியானது ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்
ஒரே அக்கௌன்ட், 5 ப்ரோஃபைல்கள்: வெளியானது ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்

ஒரே அக்கௌன்ட், 5 ப்ரோஃபைல்கள்: வெளியானது ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2023
04:46 pm

செய்தி முன்னோட்டம்

ஃபேஸ்புக் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் தங்களின் தற்போதைய அக்கௌண்டில் மேலும் 4 சுயவிவரங்களை(ப்ரொபைல்) உருவாக்க அனுமதிக்கிறது. ஒவ்வொரு ப்ரோஃபைலும் தனித்து செயல்பட முடியும். அதில் தனியாக பெயர், பதிவுகள், பிரைவசி செட்டிங் என தனித்தனியாக மாற்றிக்கொள்ளலாம். உங்கள் குடும்பத்தாருக்கு, நண்பர்களுக்கு, சக ஊழியர்களுக்கு என நீங்கள் இப்போது உங்கள் முகப்பை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இந்த புதிய வசதி, பயனர்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் திறனை வழங்கும் அதே வேளையில், இது தவறான பயன்பாட்டிற்கு வழிவகுக்கலாம். புதிய மல்டி-புரொஃபைல் அம்சமானது, நீங்கள் லாகின்/லாக் அவுட் செய்ய வேண்டிய அவசியமின்றி, இன்ஸ்டாகிராம் போலவே, தடையற்ற சுயவிவர மாற்றத்தை செயல்படுத்துகிறது.

card 2

கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

தற்போது இந்த புதிய அப்டேட்டில், Facebook ஆப்/இணையம் வழியாக செய்தி அனுப்புதல் வசதி தரப்படுகிறது. FB மெசஞ்சருக்கான வசதி விரைவில் சேர்க்கப்படும். உங்கள் பிரைமரி அக்கௌண்டில் சுயவிவரம், நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பெயரில் இருக்க வேண்டும் என்று Facebook வலியுறுத்துகிறது. மற்ற ப்ரொபைல்கள் வேறு எந்த பெயரில் வேண்டுமானாலும் இருக்கலாம். எனினும் இந்த புதிய வசதியை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான கொள்கைகளைக் கொண்டிருப்பதாக Facebook கூறுகிறது. யாரேனும் தங்கள் ப்ரொபைல்களைப் பயன்படுத்தி தவறாக நடக்கும் பட்சத்தில், அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று FB உறுதியளிக்கிறது.