
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்களைக் கண்டறிவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களின் அளவு கடந்த சில மாதங்களில் அதிகரித்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் கொண்டு வரும் மிகப் பெரிய ஆபத்து, போலியான நம்பத்தகுந்த வகையிலான தகவல்கள்.
உதராணத்திற்கு யாரேனும் ஒரு நபர் செய்யாத ஒரு செயலை, அவர் செய்வதைப் போன்றே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும். மேலும், இது குறித்த விழிப்புணர்வு இல்லாத இணையப் பயனர்கள், அவை உண்மை என்றே நம்பும் வகையிலும் அவை இருக்கும் என்பது தான் ஆபத்தான விஷயம்.
இந்த செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோடு, ஒரு உள்ளடக்கம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியவும் கற்றுக் கொள்வது அவசியம்.
செயற்கை நுண்ணறிவு
எப்படிக் கண்டறிவது?
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், அவை இன்னும் முழுமை பெறவில்லை. அது போலவே அவை உருவாக்கும் உள்ளடக்கங்களும் முழுமை பெற்றிருக்காது.
சற்று கூர்ந்து கவனித்தாலே, ஒரு உள்ளடக்கம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடுன் உருவாக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.
மேலும், ஒரு உள்ளடக்கத்தில் நம்பத்தகாத வகையிலான அல்லது மிகவும் அதிசயிக்கததக்க வகையிலான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கிறதென்றால், அது குறித்த உண்மைத் தன்மையை பிற மூலங்களைப் பயன்படுத்தி உறுதி செய்வது மிக்க நல்லது.
ஏனெனில், போலியாக பரப்பப்படும் தகவல் குறித்து பல மூலங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறையும். இதன் மூலம், எளிதாக செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான உள்ளடக்கங்களைக் கண்டறிந்து விட முடியும்.