ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம்
செய்தி முன்னோட்டம்
கடந்தாண்டு முதலே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவிலான பணிநீக்கத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்வதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் கூகுள் ஊழியர் ஒருவர்.
இந்திய மதிப்பில், ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் பெறும் டெவான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மென்பொருள் பொறியாளர், ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை மட்டுமே அலுவலக வேலைகளுக்குச் செலவிடுவதாகவும், மற்ற நேரத்தை தன்னுடைய ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கூகுள் தங்களுடயை ஊழியர்களுக்கு இலவச உணவு முதல் உடற்பயிற்சிக்கூடம் வரை பல்வேறு வசதிகளை அளிக்கும் நிலையில், 97% ஊழியர்கள் கூகுளில் வேலை பார்ப்பதை விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
கூகுள்
குறைந்த அளவு நேரம் மட்டுமே வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்:
தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை விரைவாக முடிக்கும் திறன் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், வருடக்கணக்கில் நாள் முழுவதும் வேலை பார்த்து பதவி உயர்வுகளின்றி தவிக்கும் ஊழியர்களை தான் பார்த்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய வேலையைத் தக்க வைத்துக் கொள்ள குறைந்தபட்சம் என்ன செய்ய வேண்டுமோ, அதனை பிழையின்றி செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், அதிக வேலையின்றி சம்பளம் மட்டும் பெறும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்களில் தானும் ஒருவர் எனத் தெரிவித்துள்ளார்.
பிற்காலத்தில் தேவைப்படுவார்கள் என இதுபோன்று ஊழியர்களை முன்கூட்டியே பணியில் அமர்த்துவதை தொழில்நுட்ப நிறுவனங்களும் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
திறமையான ஊழியர்கள் தங்களுடைய போட்டி நிறுவனங்களுக்குச் சென்று புதிய தயாரிப்புகளை உருவாக்குவதை அந்நிறுவனங்கள் விரும்புவதில்லை.