NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு!
    அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு

    AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 28, 2023
    10:06 am

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தங்களுடைய வருடாந்திர நிகழ்வான மெட்டா கனெக்ட் நிகழ்வை நேற்று (செப்டம்பர் 27) நடத்தி முடித்திருக்கிறது மெட்டா.

    ஆப்பிள், கூகுள் மற்றும் ஓபன்ஏஐ என அனைத்து நிறுவனங்களுடனும் போட்டியில் இறங்கியிருக்கிறது மெட்டா. கடந்த பல மாதங்களாகவே, பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் குறித்த அப்டேட்டை அவ்வப்போது அளித்து வந்தது அந்நிறுவனம்.

    இந்த மெட்டா கனெக்ட் நிகழ்வில், புதிய AI கருவிகள் முதல் புதிய க்வெஸ்ட் வரை தங்களுடைய அனைத்து புதிய தயாரிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது மெட்டா.

    ஒன்றல்ல, இரண்டல்ல இந்தமுறை அப்டேட்களை 'அள்ளிப்போட்டு'க் கொண்டு வந்திருக்கிறது மெட்டா நிறுவனம். என்ன 'குக்' செய்திருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க்? பார்க்கலாம்.

    மெட்டா

    மெட்டா 'க்வெஸ்ட் 3' (Quest 3): 

    ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்டுடன் போட்டியிடும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட தங்களுடைய புதி மிக்ஸ்டு ரியாலிட்டி (MR) ஹெட்செட்டான க்வெஸ்ட் 3-யை வெளியிட்டிருக்கிறது மெட்டா.

    ஆப்பிளுக்கு முன்பே MR ஹெட்செட்களை மெட்டா விற்பனை செய்யத் தொடங்கியிருந்தாலும், ஆப்பிளின் விஷன் ப்ரோ அறிமுகத்துக்குப் பின்பு, அவை மக்களிடம் அதிக கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

    பவர்ஃபுல்லான புதிய சிப், மேம்படுத்தப்பட்ட ஸ்கிரீகள், விஷன் ப்ரோவைப் போல பாஸ்த்ரூ வசதி எனப் பல்வேறு வசதிகளுடன் க்வெஸ்ட் 3-யை வெளியிட்டிருக்கிறது மெட்டா.

    மெட்டா, தங்களுடைய விலையுயர்ந்த க்வெஸ்ட் ப்ரோ மாடலில் அறிமுகப்படுத்திய பேன்கேக் லென்ஸ்களை புதிய க்வெஸ்ட் 3-யிலும் கொடுத்திருக்கிறது.

    மெட்டா

    மெட்டா க்வெஸ்ட் 3: புதிய மேம்பாடுகள் மற்றும் விலை 

    க்வெஸ்ட் 2வை விட சற்று கூடுதல் எடையாக 515 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது க்வெஸ்ட் 3. ஆனால், முன்பை விட புதிய ஹெட்செட் சற்று ஸ்லிம்மாக இருக்கிறது.

    அப்டேட் செய்யப்பட்ட ஸ்பீக்கர்களுடன், க்வெஸ்ட் 3-யின் இரண்டு கண்ட்ரோலர்களிலும் ஹேப்டிக் ஃபீடுபேக் வசதியைக் கொடுத்திருக்கிறது மெட்டா.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் XR2 ஜென் 2 சிப்புடன், 2.12 மணிநேர பேட்டரி பேக்அப்பைக் கொண்டிருக்கிறது மெட்டாவின் க்வெஸ்ட் 3.

    இந்த மேம்பாடுகளுடன், க்வெஸ்ட் 2-வை விட 200 டாலர்கள் அதிகமாக 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் 41,500 ரூபாய்) விலையில் வெளியாகியிருக்கிறது புதிய மெட்டா க்வெஸ்ட் 3. மேலும், புதிய ஹெட்செட்டுடன் ரோபோலக்ஸ் மற்றும் அசாசின்ஸ் க்ரீடு நெக்சஸ் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளையும் பெறுகிறது க்வெஸ்ட் 3.

    மெட்டா

    மெட்டாவின் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்: 

    ஹார்டுவேரில் க்வெஸ்ட் 3-யை மட்டுமே மெட்டா கனெக்ட் நிகழ்வில் அறிமுகம் செய்திருக்கிறது மெட்டா. மற்ற அனைத்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடன் கூடிய சாப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வசதிகள் தான்.

    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட மெட்டாவின் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் வகையில் AI இமேஜ் எடிட்டிங் மற்றும் AI-ஜெனரேட்டட் சாட் ஸ்டிக்கர்கள் ஆகிய இரண்டு வசதிகளை மெட்டா கனெக்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.

    இந்த வசதிகளைப் பயன்படுத்தி, நம்முடைய புகைப்படத்தை எப்படி எடிட் செய்ய வேண்டுமோ அப்படியான ப்ராம்ப்டைக் கொடுத்தால் போதும், AI வசதியுடன் இன்ஸ்டாகிராமே நம்முடைய புகைப்படத்திற்கு தேவையான அடிப்படை எடிட்டை செய்து கொடுக்கும்.

    மெட்டா

    மெட்டாவின் புதிய 'AI புகைப்பட எடிட்டிங்' வசதி: 

    இந்த AI புகைப்பட எடிட்டிங் அப்டேட்டில் இரண்டு வகையான வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா. ஒன்று ரீஸ்டைல் (Restyle), மற்றொன்று பேக்டிராப் (Backdrop).

    ரீஸ்டைலில், நம்முடைய புகைப்படம் ஒட்டுமொத்தமாக எப்படிக் காட்சியளிக்க வேண்டும் என நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, வாட்டர்கலர் போல் இருக்க வேண்டுமா அல்லது பெயிண்டிங் போன்று இருக்க வேண்டுமா என்று.

    பேக்டிராப் வசதியைக் கொண்டு, நம் புகைப்படத்திற்கு நாம் விரும்பும் வகையிலான பேக்கிரவுண்டை மாற்றிக் கொள்ள முடியும்.

    இதில் மெட்டாவின் செயற்கை நுண்ணறிவுக் கருவியிடம் எப்படி நம்முடைய புகைப்படம் இருக்க வேண்டும் என்று கட்டளையைப் பிறப்பித்தால் போதும், மற்ற வேலைகளை மெட்டாவின் AI-யே பார்த்துக் கொள்கிறது.

    மெட்டா

    AI-யால் உருவாக்கப்படும் ஸ்டிக்கர்கள்: 

    மேற்கூறிய வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடிட் செய்யும் வசதிகளை வழங்கினாலும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்க, அந்தக் குறிப்பிட்ட புகைப்படங்கள் AI-யால் எடிட் செய்யப்பட்டவை என்று குறிப்பிடும் வகையில் புதிய வசதியை அளித்திருக்கிறது மெட்டா.

    புகைப்படங்களைப் போல் கட்டளைகளைக் கொண்டே AI மூலம் ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதியை அளித்திருக்கிறது மெட்டா. இந்த வசதியினை, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்கள், DMகள் மற்றும் வாட்ஸ்அப் சாட்களிலும் பயனர்களால் பயன்படுத்த முடியும்.

    இந்த அப்டேட்களை படிப்படியாக குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டும் அடுத்த மாதம் முதல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மெட்டா.

    மெட்டா

    மெட்டா AI-க்கு அடிப்படையான Llama 2 மொழி மாதிரி: 

    அனைவரும் எதிர்பார்த்தபடி, செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய சாட்பாட்டை இந்த மெட்டா கனெக்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

    இந்த சாட்பாட்டை, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் என மெட்டாவின் எந்தத் தளத்தின் மூலமும் நாம் அணுக முடியும்.

    சாட்பாட்டிற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கிய LLM மீது இந்தப் புதிய சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது மெட்டா. LLM ஆனது, கடந்த பிப்ரவரி மாதம் மெட்டா அறிமுகப்படுத்திய Llama 2 மொழி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த மெட்டா கனெக்ட் நிகழ்வில், அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய அனைத்து AI கருவிகள் மற்றும் வசதிகளும் Llama 2 மொழி மாதிரியைக் கொண்டு இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

    மெட்டா

    மெட்டாவின் புதிய சாட்பாட்: 

    இந்த மொழி மாதிரியைக் கொண்டு இயங்கும் தங்களுடைய சாட்பாட்டை, மைக்ரோசாஃப்டின் பிங் தேடுபொறி வசதியைக் கொண்டு இணையத்தை அணுகும் வசதியுடன் உருவாக்கியிருக்கிறது மெட்டா.

    இணையத்தில் பல்வேறு இலவச சாட்பாட்கள் வலம் வந்தாலும், அவற்றால் பிற கட்டண சேவையில் இயங்கக்கூடிய அளவிற்கான சேவைகளை அளிக்க முடிவதில்லை.

    இந்நிலையில், இலவசமாக அதேசமயம் கட்டண சேவையில் இயங்கக்கூடிய வகையிலான வசதிகளை அளிக்கக்கூடிய சாட்பாட்டாக தங்களுடைய புதிய சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.

    இணையத்தை அணுகும் வசதியைப் பெற்றிருப்பதால், நிகழ்நேரத்தில் நமக்கான தகவல்களை இணையத்தின் மூலம் சேகரித்து, அதனைக் கொண்டு நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனைப் பெற்றிருக்கிறது மெட்டாவின் புதிய சாட்பாட்.

    மெட்டா

    AI தொழில்நுட்பத்துடன் கூடிய 'புகைப்படங்களை உருவாக்கும் கருவி': 

    மேற்கூறிய சாட்பாட்டில் 28 கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்துகிறது மெட்டா. அதாவது, ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தை பிரதிபலிக்கும் சாட்பாட்டிடம் நாம் உரையாடும் போது, அவர்கள் எப்படி உரையாடுவார்களோ அப்படியான ஒரு பிரதிபலிப்பை நமக்குக் கொடுக்குமாம்.

    இவை தவிர, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய புகைப்பட உருவாக்கக் கருவி ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.

    மிட்ஜர்னி மற்றும் டால்-Eயை போ, கட்டளைகளைக் கொண்டு இந்த கருவியில் நம்மால் புகைப்படங்களை உருவாக்க முடியும்.

    மேலும், தவறான பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், இந்தக் கருவி உருவாக்கும் புகைப்படங்களில், AIயால் உருவாக்கப்பட்டது என்ற குறியீடு இடம்பெறும் வகையில் இதனைக் கட்டமைத்திருக்கிறது மெட்டா.

    மெட்டா

    ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்: 

    ஸ்மார்ட் வாட்ச்களைத் தொடர்ந்து, ஸ்மார்ட் கிளாஸ் யுகத்துக்கு முன்னேறுகிறது தொழில்நுட்பம். அதற்கான முயற்சியில் ஒன்றால் மெட்டாவின் இந்த ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸைப் பார்க்கலாம்.

    கேமரா மற்றும் 32GB ஸ்டோரேஜூடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் கிளாஸைக் கொண்டு 12MP புகைப்படங்கள் மற்றும் 1080p காணொளிகளைப் பதிவு செய்ய முடியுமாம்.

    மேலும் இதன் 32GB ஸ்டோரேஜில், 500 புகைப்படங்கள் மற்றும் 100 30-நொடிகள் கொண்ட காணொளிகளைச் சேமித்து வைக்க முடியும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    மெட்ட வ்யூ செயலியின் உதவியுடன், இந்த ஸ்மார்ட் கிளாஸைக் கொண்டு நாம் படம்பிடித்த புகைப்படங்களையும், காணொளிகளையும் கண்டுகளிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

    மெட்டா

    ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்: விலை 

    இது மட்டுமின்றி, அமேசான் எக்கோ ஃபிரேமைப் போல பெர்சனலான ஆடியோ சிஸ்டத்தையும் கொண்டிருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட் கிளாஸ்.

    இந்த ஸ்மார்ட் கிளாஸின் உதவியுடனே, பாடல்களைக் கேட்கலாம், அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் 'ஹே மெட்டா' என AI-யிடம் உரையாடலாம்.

    குவால்காம் ஸ்னாப்டிரான் AR1 ஜென் 1 ப்ராசஸரை இந்த ஸ்மார்ட் கிளாஸானது, ஒரு முறை சார்ஜிங்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் வரையிலான பயன்பாட்டைக் கொடுக்கிறது. மேலும், இதற்கான கேஸைக் கொண்டு கூடுதலாக எட்டு மணி நேரம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    தற்போது 299 (இந்திய மதிப்பில் 24,900 ரூபாய்) டாலர்கள் விலையில் இந்தப் புதிய ஸ்மார்ட் கிளாஸை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெட்டா
    சமூக வலைத்தளம்
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா? உடல் ஆரோக்கியம்
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு பொள்ளாச்சி

    மெட்டா

    45 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன? வாட்ஸ்அப்
    10,000 பணியாளர்கள் பணிநீக்கம்.. புதிய திட்டத்தில் மெட்டா நிறுவனம்!  ஃபேஸ்புக்
    அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி! ஆட்குறைப்பு
    8 வருடம் பணியாற்றிய மெட்டா ஊழியர் பணிநீக்கம் - உருக்கமான பதிவு! ஆட்குறைப்பு

    சமூக வலைத்தளம்

    ட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம்
    இனி 'Tweetdeck'-ஐ பயன்படுத்தவும் கட்டணம், ட்விட்டரின் புதிய அறிவிப்பு ட்விட்டர்
    அறிமுகப்படுத்தி இரண்டு நாட்களிலேயே Threads-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது மெட்டா இன்ஸ்டாகிராம்
    ட்விட்டரில் தடை.. த்ரெட்ஸில் புதிய கணக்கைத் தொடங்கினார் ஜாக் ஸ்வீனி இன்ஸ்டாகிராம்

    செயற்கை நுண்ணறிவு

    ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம்.. ஓபன்ஏஐ சிஇஓ கருத்து! சாட்ஜிபிடி
    IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI சாட்ஜிபிடி
    இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி! சாட்ஜிபிடி
    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம்

    கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன கூகுள்
    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025