
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கருவிகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கும் அடோப்
செய்தி முன்னோட்டம்
தொழில்நுட்ப உலகின் பல்வேறு படிநிலைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் ஆதிக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாட்பாட்டாக தொடங்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, புகைப்படங்கள், எடிட்டிங் என பலவகைகளிலும் தற்போது உறுமாறியிருக்கிறது.
மைக்ரோசாஃப்ட், மெட்டா மற்றும் கூகுள் என முன்னணி டெக் நிறுவனங்கள் பலவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயல்பாட்டுக் கருவிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போது அந்த வரிசையில் புதிதாக இணையவிருக்கிறது அடோப் (Adobe).
தங்களுடைய புதிய கருவிகள், திட்டங்கள் மற்றும் மேம்பாடுகளை டெக் உலகிற்கு பறைசாற்ற, அடுத்த வாரம் 'அடோப் மேக்ஸ்' வருடாந்திர நிகழ்வை நடத்தவிருக்கிறது அடோப் நிறுவனம். இந்த நிகழ்விலேயே தங்களது புதிய 'ஸ்டார்டஸ்ட் திட்டத்தையு'ம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அடோப்.
செயற்கை நுண்ணறிவு
அடோபின் ஸ்டார்டஸ்ட் திட்டம்:
ஆங்கில அகராதியில் இணையத் தேடல் என்ற வார்த்தைக்கு மறுவுறுவாய் கூகுள் விளங்குவதைப் போல, புகைப்பட எடிட்டிங் என்றாலே அது அடோபின் ஃபோட்டோஷாப் தான்.
ஆனால், புதிதாக போட்டோ எடிட்டிங் செய்பவர்களுக்கு உகந்த மென்பொருளார போட்டோஷாக் இருப்பதில்லை. புதிதாக போட்டோ எடிட்டிங் செய்பவர்களுக்கும் உகந்த வகையில் போட்டோஷாப்பை மாற்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது அடோப்.
அதனையே ஸ்டார்ட்ஸ்ட் திட்டம் எனவும் குறிப்பிடுகிறது அந்நிறுவனம். ஒரு புகைப்படத்தில் குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுப்பது முதல், அதில் மாற்றம் செய்வது, நீக்குவது உள்ளிட்ட பலவேறு விதமான செய்கைககளையும் போட்டேஷாப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே நம்மால் செய்து முடிக்க முடியும்.
அடோப்
என்னென்ன வசதிகளை அளிக்கவிருக்கிறது அடோப்:
போட்டேஷாப்பின் திறன்களில் ஒன்று ஒரு போட்டோவை தனித்தனி லேயர்களாகப் பிரித்து பயன்படுத்தும் வசதி. இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் உதவியுடன் புதிய பயனாளர்களாலும் அதனை எளிதாகச் செய்ய முடிகிறது.
இதனைத் தவிர, ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தில் நாம் என மாற்றம் செய்ய விரும்புகிறோம் என்பதைக் கணித்து அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்குவிருக்கிறது. அந்தப் பரிந்துரைகளை நாம் கிளிக் செய்தாலே போதும், தானாகவே குறிப்பிட்ட புகைப்படத்தில் அந்தக் குறிப்பிட்ட மாற்றத்த மேற்கொண்டு விடுகிறது அடோபின் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி.
இதே போன்ற வசதிகளையே மேஜிக் எடிட்டர் என்ற பெயரில் புதிய பிக்சல் போன்களில் வழங்கியிருக்கிறது கூகுள். ஆனால், அடோப் வழங்கும் வசதியானது கூகுள் வழங்கியதை விட உயர்தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.