
சாட்டிலைட் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் சமீபத்திய ஐபோனில் அவசர காலங்களில் தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் இருந்து கூட, சாட்டிலைட் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் அவசரகால குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது.
தற்போது அதே போன்றதொரு வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் கூகுள் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த பல மாதங்களாகவே புதிய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை சோதனை செய்து வருகிறது கூகுள். அடுத்த சில வாரங்களில் இந்தப் புதிய இயங்குதளம் வெளியிடப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது.
இந்த நிலையில் தான், புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சாட்டிலைட் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய வசதியும் அதில் இடம்பெறவிருப்பதாக, #Teampixel என்ற கூகுளின் புதிய வசதிகள் குறித்த அப்டேட்டை வழங்கும் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு
அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியுமா?
இந்த புதிய வசதியானது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இடம்பெற்றாலும், இதனை பயன்படுத்துவதற்கு வன்பொருளும் (Hardware) அவசியம்.
சாட்டிலைட்டுடன் இணைக்கும் வகையிலான வன்பொருளை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தாங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போனில் வழங்கினால், இந்த வசதியை அந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும் என்பதையும் அந்த ட்விட்டர் பதிவின் மறுமொழியில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
முதற்கட்டமாக, பிக்சல் மற்றும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் இந்தப் புதிய வசதியானது அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்கள் அல்லது குறைந்த அளவு தொலைத்தொடர்பு வசதி கொண்ட இடங்களில் இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த வசதியைப் பயன்படுத்த சிம் கார்டும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
#Teampixel-ன் ட்விட்டர் பதிவு:
SMS Satellite will be added to Android, and requires appropriate hardware, it's up to the manufacturer then
— Pixel #TeamPixel (@GooglePixelFC) July 20, 2023
Pixel and Galaxy will be among the first to have it