கிரிக்கெட்: செய்தி

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் : அக்சர் படேல் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார்.

இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் இடம் பெற்ற சம்பவம்

மார்ச் 13, 1996 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும். ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதால் ரசிகர்கள் பாட்டில் மற்றும் கேன்களை வீசி எறிந்து வன்முறைக்காடாக மாறியது.

மைதானத்திலேயே முடி வெட்டிக் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் : சுனில் கவாஸ்கரின் சுவாரஷ்ய சம்பவம்

அகமபாத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் ஏபிசி வர்ணனை பெட்டியில் இருந்த பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

SLvsNZ முதல் டெஸ்ட் : நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் உடைகள் மற்றும் உடைமைகள் அடங்கிய பை கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்?

ஸ்ரேயாஸ் ஐயரின் முதுகு ஸ்கேன் முடிவு வெளியாகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்கு உரியதாகி உள்ளது.

இந்தியாவில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13வது இந்திய வீரர் : விராட் கோலி சாதனை

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டியில் கோலி களம் இறங்கியதும், இந்தியாவில் 50வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் எடுத்த நான்காவது வீரர் : புஜாரா சாதனை

இந்திய அணியின் மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்துள்ளார்.

ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் விலகல்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன், தொடையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

INDvsAUS : நான்காவது டெஸ்ட் : 3வது நாள் முடிவில் வலுவான நிலையை நோக்கி இந்தியா

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் இந்தியா 250 ரன்களை கடந்து வலுவான நிலைக்கு சென்று கொண்டுள்ளது.

உள்நாட்டில் 4,000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் : விராட் கோலி சாதனை

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்தியாவில் 4,000 டெஸ்ட் ரன்களை எட்டி விராட் கோலி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

"கிளாஸ்" : தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கும்ப்ளே பாராட்டு

அகமதாபாத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அனில் கும்ப்ளேவின் இரண்டு சாதனைகளை அஸ்வின் முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதமடித்தார் ஷுப்மன் கில்

ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்டில் 128 ரன்கள் எடுத்து தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை கடந்த ஏழாவது இந்தியர் : ரோஹித் சர்மா சாதனை

ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த ஏழாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மகளிர் ஐபிஎல்லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : அலிசா ஹீலி சாதனை

மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எட்டாவது போட்டியில் யுபி வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்தார்.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2023 : மீண்டும் களம் காணும் கவுதம் கம்பீர்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் மூன்றாவது சீசன் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) தொடங்கவுள்ளது.

IND vs AUS நான்காவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் : ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை

இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் : கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ், முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

INDvsAUS நான்காவது டெஸ்ட் : சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார் கேமரூன் கிரீன்

அகமதாபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.

இதே நாளில் அன்று : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா உலக கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்ற தினம்

கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு முறை நடந்த உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்ற தினம் இன்று.

சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்?

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் (டிஎன்சிஏ) தெரிவித்தன.

"இதெல்லாம் தவறான செயல்" : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் : ஏஞ்சலோ மேத்யூஸ் சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக ஹேக்லி ஓவலில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களை எடுத்தார்.

சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி : மார்ச் 13 முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

"சேவாக் எப்பவுமே வெளிப்படையானவர்" : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா

பேட்டிங் என்றாலும் சரி களத்திற்கு வெளியேயானாலும் சரி, வீரேந்திர சேவாக் தனக்கென ஒரு பாணியை கொண்டதோடு, மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஆவார்.

INDvsAUS நான்காவது டெஸ்ட் : கவாஜாவின் எழுச்சியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.

INDvsAUS : நான்காவது டெஸ்ட் : 14வது சதத்தை நிறைவு செய்தார் உஸ்மான் கவாஜா

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14வது சதத்தை விளாசியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்னே ராணா நியமனம்

மகளிர் பிரிமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் காயம் அடைந்த பெத் மூனிக்கு பதிலாக ஸ்னே ராணா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் விலகல்?

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் விலகிய நிலையில், மார்ச் 17 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரிலும் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மைதானத்தில் செய்யும் வேலையா இது? வைரலாகும் விராட் கோலியின் வீடியோ

விராட் கோலி ஃபிட்னஸை பார்த்துக்கொள்வதில் மட்டுமல்ல ஒரு உணவுப் பிரியரும் கூட.

இன்னும் 42 ரன்கள் தேவை : கவாஸ்கர் டிராபியில் கவாஸ்கர் சாதனையை முறியடிப்பாரா கோலி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் மற்றும் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsAUS நான்காவது டெஸ்ட் : டாஸ் வென்றது ஆஸ்திரேலியா! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்கள் : புதிய சாதனை படைப்பாரா அஸ்வின்?

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஸ்ட்ரைக் ரேட்டை பெருசா எடுத்துக்காதீங்க" : கே.எல்.ராகுல் அட்வைஸ்

இந்திய அணியின் முக்கிய வீரரான கே.எல்.ராகுல், வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸை இணைக்க முயற்சி

இந்த மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுடனான தென்னாப்பிரிக்காவின் டி20 அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ் சேர்க்கப்படவில்லை என்றாலும், அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மகளிர் டி20 உலகக்கோப்பையின் போது இன்ஸ்டாகிராமில் பிரபலமான வீராங்கனையாக இருந்த ஸ்மிருதி மந்தனா

சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை 2023 இல் இந்தியர்கள் வீராங்கனைகள் மற்றும் அணிகளை எவ்வாறு கொண்டாடினர் என்பது பற்றிய தகவல்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் விளம்பர ஷூட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா : வைரலாகும் வீடியோ

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசன் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்கள் விளம்பர ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தான் : முன்னாள் கிரிக்கெட்டர் ஏபி டி வில்லியர்ஸ்

டி20 கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வீரர் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் தான் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.