
மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸை இணைக்க முயற்சி
செய்தி முன்னோட்டம்
இந்த மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுடனான தென்னாப்பிரிக்காவின் டி20 அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ் சேர்க்கப்படவில்லை என்றாலும், அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
38 வயதாகும் டு பிளெஸ்ஸிஸ் 2021இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை.
ஆனால் 2021 முதலே அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவரை மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன.
தென்னாப்பிரிக்காவின் வொயிட் பால் அணியின் புதிய பயிற்சியாளர் ராப் வால்டர் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.
பாப் டு பிளெஸ்ஸிஸ்
பாப் டு பிளெஸ்ஸிஸ் மீண்டும் விளையாடுவாரா?
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின் படி, வால்டர் மற்றும் டு பிளெஸ்ஸிஸ் ஊதியம் குறித்து விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்த மாத இறுதியில் புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவிக்க உள்ளது. மேலும் இதில் ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டுக்கு தனித்தனி ஒப்பந்தங்கள் பற்றிய யோசனையும் உள்ளது.
இது அமலுக்கு வரும்பட்சத்தில் டு பிளெசிஸ் 2024 டி20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு மீண்டும் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே டு பிளெஸ்ஸிஸ் தனது கடைசி டெஸ்டிலிருந்து, ஐபிஎல், பிபிஎல், எஸ்ஏ20 உள்ளிட்ட பல்வேறு லீக் போட்டிகளில் 90 இன்னிங்ஸ்களில் விளையாடி 2,747 ரன்களை எடுத்துள்ளார். இதில் நான்கு டி20 சதங்களும் அடங்கும்.