INDvsAUS நான்காவது டெஸ்ட் : டாஸ் வென்றது ஆஸ்திரேலியா! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. எனினும் மூன்றாவது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது. இந்தியா தற்போது 2-1 என தொடரில் முன்னிலை பெற்றாலும், அகமதாபாத்தில் இன்று தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அதிகாரப்பூர்வமாக நுழைய முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா : விளையாடும் XI வீரர்கள்
இந்திய அணி : ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ். ஆஸ்திரேலிய அணி : டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(டபிள்யூ), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டாட் மர்பி, மேத்யூ குஹ்னெமன். இந்திய பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இருவரும் போட்டியை காண நேரில் அகமதாபாத் ஸ்டேடியத்திற்கு வந்துள்ளனர்.