அடுத்த செய்திக் கட்டுரை

மைதானத்தில் செய்யும் வேலையா இது? வைரலாகும் விராட் கோலியின் வீடியோ
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 09, 2023
01:47 pm
செய்தி முன்னோட்டம்
விராட் கோலி ஃபிட்னஸை பார்த்துக்கொள்வதில் மட்டுமல்ல ஒரு உணவுப் பிரியரும் கூட.
டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில், டிரஸ்ஸிங் ரூமில் 'சோலே குல்சே'யை பார்த்து கோலி உற்சாகமடைந்த காட்சி வைரலானது.
இந்நிலையில், தற்போது அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அவர் மைதானத்தில் செய்தது தான் டிரெய்லர்.
முகமது ஷமி வீசிய 22வது ஓவர் தொடங்குவதற்கு முன், இரண்டாவது ஸ்லிப்பில் நின்று கோலி ஸ்னாக்ஸ் சாப்பிடுவது கேமராவில் சிக்கியது.
பின்னர் ஷமி பந்தை வீச, லாபுஷாக்னே அதை தடுக்க உடனடியாக பாக்கெட்டில் கையை விட்டு மீண்டும் ஸ்னாக்ஸை எடுத்து சாப்பிட்டார். மூன்றாவது ஸ்லிப்பில் அவருக்கு அடுத்ததாக நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வழங்கினார்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.