டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் : அக்சர் படேல் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி ஆட்டத்தில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். சமீபகாலமாக அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட போராடிய போதிலும், வெறும் 12 டெஸ்டில் 2,205 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார். நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தியன் மூலம் மூலம், அக்சர் (2,205) வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை (2,465) பின்னுக்குத் தள்ளி, பந்துகளின் அடிப்படையில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் ஆனார். 2,534 பந்துகளில் ரன்களை எட்டிய கர்சன் காவ்ரி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (2,597) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அக்சர் படேல் புள்ளி விபரங்கள்
பிப்ரவரி 2021 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அக்சர் படேல் அறிமுகமானார். அவர் தனது அறிமுக தொடரில் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக, அவர் டெஸ்டில் 5 முறை ஐந்து விக்கெட்டுகளையும், ஒரு முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதற்கிடையே, நடப்பு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மூன்று அரைசதங்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 264 ரன்கள் குவித்து, இந்திய வீரர்களில் விராட் கோலிக்கு (297) அடுத்தபடியாக இரண்டாவது அதிக ரன் குவித்தவராக உள்ளார்.