ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் உடைகள் மற்றும் உடைமைகள் அடங்கிய பை கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பென் ஸ்டோக்ஸ் கோபமாக, "கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் எனது பையை யார் திருடினார். என் உடைகள் உங்களுக்கு மிகவும் பெரியதாக இருக்கும் என்று நம்புகிறேன் ******." என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கிங் கிராஸ் ரயில் நிலையம் மிகப்பழமையானது. மேலும் 1852 இல் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ்
ஐபிஎல்லில் விளையாடுவாரா பென் ஸ்டோக்ஸ்?
இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸுக்கு, சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த தொடரில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட நிச்சயம் இந்தியா வருவேன் என கூறியுள்ளார்.
தோனி 2023 சீசனுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜூன் 16 ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு முழு உடல்தகுதியுடன் இருக்க, ஐபிஎல் தொடரை கைவிடுமாறு ஸ்டோக்ஸிடம் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அழைப்பு விடுத்துள்ளார்.