டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதமடித்தார் ஷுப்மன் கில்
ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்டில் 128 ரன்கள் எடுத்து தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 100 ரன்களை கடந்தார். இது அவருக்கு இந்தியாவில் முதல் டெஸ்ட் சதமாகும். முன்னதாக கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக கில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். கில் இந்த ஆனால் 71க்கு மேல் சராசரியுடன் 5 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 890 ரன்களுக்கு மேல் எடுத்து, இந்த ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, உஸ்மான் கவாஜா (180) மற்றும் கேமரூன் கிரீனின் (114) அபார சதங்களால் 480 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, தற்போது 200 ரன்களுக்கும் மேல் பின்தங்கிய நிலையில், 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. கில் 128 ரன்களும் ரோஹித் 35 ரன்களும், புஜாரா 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தற்போது களத்தில் ஆடி வருகின்றனர்.