மகளிர் ஐபிஎல்லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : அலிசா ஹீலி சாதனை
மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எட்டாவது போட்டியில் யுபி வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மகளிர் ஐபிஎல்லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை அலிசா ஹீலி பதிவு செய்துள்ளார். மேலும் ஹீலி தனது சக வீராங்கனையான தஹிலா மெக்ராத்தின் முந்தைய சிறந்த ஸ்கோரான 90*ஐ முறியடித்துள்ளார். தற்போது மகளிர் ஐபிஎல்லில் 90க்கும் அதிகமான ஸ்கோரைப் பெற்ற வீராங்கனைகள் இந்த இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அடுத்தபடியாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷஃபாலி வர்மா 84 ரன்களுடன் உள்ளார்.
உ.பி.வாரியஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி ஹைலைட்ஸ்
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அதிகபட்சமாக 52 ரன்களை விளாசினார். மறுபுறம் சிறப்பாக பந்துவீசிய உ.பி.வாரியஸ் அணியின் சோஃபி எக்லெஸ்டோன் நான்கு விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 139 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் விக்கெட் இழப்பின்றி 13 ஓவரிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஹீலி 96* ரன்களும் தேவிகா வைத்யா 36* ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் உ.பி.வாரியஸ் தனது இரண்டாவது வெற்றியை பெற்ற நிலையில், ஆர்சிபி அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.