Page Loader
IND vs AUS நான்காவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

IND vs AUS நான்காவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2023
06:29 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன்கள் பின்தங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்த நிலையில், இளம் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனும் (114) சதம் அடித்தார். அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 17 ரன்களுடனும், கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில், இந்தியாவில் முதலில் பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலியா தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அதேசமயம், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலியா 400 ரன்களை எட்டுவது இது ஐந்தாவது முறையாகும். இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த எந்தவொரு அணியும் இந்த இலக்கைத் தொட்டதில்லை. மேலும் 2013ல் இருந்து சொந்த மண்ணில் இந்தியா பெற்ற மூன்று டெஸ்ட் தோல்விகளில் இரண்டிற்கு ஆஸ்திரேலியாதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.