Page Loader
மகளிர் டி20 உலகக்கோப்பையின் போது இன்ஸ்டாகிராமில் பிரபலமான வீராங்கனையாக இருந்த ஸ்மிருதி மந்தனா
மகளிர் டி20 உலகக்கோப்பையின் போது இன்ஸ்டாகிராமில் பிரபலமான வீராங்கனையாக இருந்த ஸ்மிருதி மந்தனா

மகளிர் டி20 உலகக்கோப்பையின் போது இன்ஸ்டாகிராமில் பிரபலமான வீராங்கனையாக இருந்த ஸ்மிருதி மந்தனா

எழுதியவர் Sekar Chinnappan
Mar 07, 2023
02:56 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை 2023 இல் இந்தியர்கள் வீராங்கனைகள் மற்றும் அணிகளை எவ்வாறு கொண்டாடினர் என்பது பற்றிய தகவல்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள தகவலின்படி. ஸ்மிருதி மந்தனா மிகவும் பிரபலமான வீராங்கனையாக இன்ஸ்டாவில் இருந்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போட்டி, இந்தியாவில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக இருந்துள்ளது. மேலும் போட்டி நடந்த காலத்தில் அது குறித்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரீல்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளன.

ஸ்மிருதி மந்தனா

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புள்ளிவிபரம்

அதிகமாக பேசப்பட்ட சில வீராங்கனைகள் : ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ். அதிகமாக பேசப்பட்ட சில அணிகள் : இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா. அதிகமாக பேசப்பட்ட சில போட்டிகள் : இந்தியா vs பாகிஸ்தான், ஆஸ்திரேலியா vs இந்தியா, இங்கிலாந்து vs இந்தியா, இந்தியா vs அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா. மிகவும் பிரபலமான சில ஹேஷ்டேக்குகள் (போட்டிகளைத் தவிர) : டி20 உலகக் கோப்பை, மகளிர் கிரிக்கெட், இந்திய மகளிர் அணி.