ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் எடுத்த நான்காவது வீரர் : புஜாரா சாதனை
இந்திய அணியின் மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்துள்ளார். நடந்து வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்டின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டி, இந்த சாதனையை செய்த நான்காவது இந்தியர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் அவர் 121 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். புஜாரா 74/1 என ஸ்கோர்கார்டு இருந்த நிலையில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். அவர் கில்லுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2,000 ரன்கள்
புஜாரா இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 டெஸ்டில் 50.82 சராசரியில் 2,033 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் அவரது மூன்று இரட்டை சதங்களில் இரண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் (3,630), விவிஎஸ் லட்சுமண் (2,434), மற்றும் ராகுல் டிராவிட் (2,143) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ரன்களைக் குவித்த மற்ற இந்தியர்கள் ஆவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாராவின் 16 ஐம்பதுக்கும் மேற்பட்ட டெஸ்ட் ஸ்கோர்கள் ஒரு இந்தியரின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். இதில் டெண்டுல்கர் (27) மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் (18) ஆகியோர் மட்டுமே புஜாராவை விட முன்னணியில் உள்ளனர்.