இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் இடம் பெற்ற சம்பவம்
மார்ச் 13, 1996 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும். ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதால் ரசிகர்கள் பாட்டில் மற்றும் கேன்களை வீசி எறிந்து வன்முறைக்காடாக மாறியது. 1996 உலகக்கோப்பை காலிறுதியில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த இந்திய அணி இலங்கையுடன் மோதியது. ஈடன் கார்டனில் இதே நாளில் நடந்த அந்தப் போட்டியில் கேப்டன் முகமது அசாருதின் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்து. இலங்கையின் டாப் டார்டாரை ஜவஹல் ஸ்ரீநாத் எளிதாக சரித்தாலும், மிடில் ஆர்டரில் குறிப்பாக அரவிந்த டி சில்வா மற்றும் ரோஷன் மஹாநாமவின் அரைசதங்கள் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.
இலங்கையின் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் சச்சின் மட்டும் 65 ரன்கள் எடுத்த நிலையில், மறுபுறம் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர் 34.1 ஓவரிலேயே 8 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. வினோத் காம்ப்ளி (10*), கும்ப்ளே (0*) ஆகியோர் கிரீஸில் இருந்தனர். இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் பாட்டில்கள், கேன்கள், பிளாஸ்டிக் பைகளை மைதானத்தை நோக்கி வீசினர். இதனால் இலங்கை வீரர்கள் விளையாட மறுத்தனர். மேலும் ஸ்டேடியத்தின் சில ஸ்டாண்ட்களில் பொருட்கள் எரிக்கப்பட்டன. போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட மீண்டும் தொடங்கிய நிலையிலும் ரசிகர்கள் வன்முறை தொடர்ந்ததால் போட்டி நடுவர் கிளைவ் லியோல்ட் இலங்கை வென்றதாக அறிவித்தார். இந்த நிகழ்வு இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.