INDvsAUS : நான்காவது டெஸ்ட் : 3வது நாள் முடிவில் வலுவான நிலையை நோக்கி இந்தியா
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் இந்தியா 250 ரன்களை கடந்து வலுவான நிலைக்கு சென்று கொண்டுள்ளது. இரண்டாவது நாளில் முதல் இன்னிங்ஸை முடித்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, சனிக்கிழமை (மார்ச் 11) மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாம் நாளில் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஷுப்மன் கில் 128 ரன்களும், சேதேஷ்வர் புஜாரா 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 59 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் : மூன்றாம் நாள் சாதனைகள்
கில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுலுக்குப் பின் ஒரு வருடத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். சச்சின் டெண்டுல்கர் (22), கோஹ்லி (15) ஆகியோருக்கு அடுத்தபடியாக, கில் இப்போது 23 வயதில் இந்திய பேட்டர்களில் அதிக சதம் (7) பெற்றுள்ளார். 17,000 சர்வதேச ரன்களை எட்டிய ஏழாவது இந்தியர் என்ற பெருமையை ரோஹித் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா 2,000 ரன்களை கடந்த நான்காவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.