
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்?
செய்தி முன்னோட்டம்
ஸ்ரேயாஸ் ஐயரின் முதுகு ஸ்கேன் முடிவு வெளியாகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்கு உரியதாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவது குறித்து நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை என அடுத்தடுத்து முக்கிய போட்டிகள் நடக்க உள்ளது.
இதற்காக வீரர்களின் உடற்தகுதியை பேண பிசிசிஐ முக்கியத்துவம் கொடுத்து வருவதால், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் அவரை நீக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதி
BREAKING 🚨#ShreyasIyer will take no further part in this Test. A specialist opinion will be sought.#BorderGavaskarTrophy2023 #INDvsAUSTest pic.twitter.com/H3YYIEswSF
— RevSportz (@RevSportz) March 13, 2023