இன்னும் 42 ரன்கள் தேவை : கவாஸ்கர் டிராபியில் கவாஸ்கர் சாதனையை முறியடிப்பாரா கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் மற்றும் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி டிசம்பர் 2019 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது அவரது சராசரியை கிட்டத்தட்ட 55 இலிருந்து 48 ஆகக் குறைத்துவிட்டது. இந்தியாவில் சுழலுக்கு எதிராக அவரது ரன் வேட்டை மிகவும் வலுவானதாக இருந்தது. 2017-2020க்கு இடையில், அவர் இந்தியாவுக்காக ஸ்பின்னர்களுக்கு எதிராக 115 என்ற சராசரியை கொண்டிருந்தார். ஆனால் ஜனவரி 2021 முதல், சுழலுக்கு எதிராக அவரது சராசரி 22.85 ஆகக் குறைந்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மூன்று முறை டோட் மர்பியாலும், இரண்டு முறை மேத்யூ குஹ்னிமேனாலும் வெளியேற்றப்பட்டார்.
4,000 ரன்கள் மைல்கல் சாதனையை நெருங்கும் கோலி
இருப்பினும், கோலி நான்காவது டெஸ்டில் 42 ரன்கள் எடுத்தால், இந்தியாவில் 4,000 டெஸ்ட் ரன்களை வேகமாக எட்டிய மூன்றாவது/இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை பெறுவார். மேலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய ஐந்தாவது இந்தியர் என்ற சிறப்பையும் பெறுவார் இந்தியாவில் 4000 டெஸ்ட் போட்டிகளை வெறும் 71 இன்னிங்ஸ்களில் கடந்து சேவாக் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் 78 இன்னிங்ஸ்களிலும், கவாஸ்கர் 87 இன்னிங்ஸ்களிலும், டிராவிட் 88 இன்னிங்ஸ்களிலும் 4,000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளனர். கோலி தற்போது 76 இன்னிங்ஸில் 3,958 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.