இந்தியாவில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் : ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை
இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒருவரின் மூன்றாவது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை அவர் பதிவு செய்தார். டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கவாஜா பொறுமையுடன் விளையாடி ரன் சேர்த்தார். முதல் நாளிலேயே சதத்தை எட்டிய கவாஜா இரண்டாம் நாளிலும் பொறுமையுடன் ஆடி 180 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதற்கிடையே முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா 480 குவித்து ஆல் அவுட் ஆனது.
உஸ்மான் கவாஜா டெஸ்ட் புள்ளி விபரங்கள்
2019 ஆஷஸ் தொடரைத் தொடர்ந்து அணியிலிருந்து நீக்கப்பட்ட கவாஜா, கடந்த ஆண்டு ஜனவரியில் தான் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். அப்போது தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் கவாஜா, நடப்பு இந்திய தொடரில் இதுவரை மூன்று 50+ ஸ்கோர்களை அடித்துள்ளார். மேலும் இந்த தொடரில் கவாஜா ஆஸ்திரேலியாவின் முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவாஜா கடந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பிய பிறகு 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 69.91 என்ற சராசரியை 1,608 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும். இந்த காலகட்டத்தில் வேறு எந்த ஒரு வீரரும் 1,500 ரன்களை கூட எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.