அடுத்த செய்திக் கட்டுரை

"கிளாஸ்" : தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கும்ப்ளே பாராட்டு
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 11, 2023
04:47 pm
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அனில் கும்ப்ளேவின் இரண்டு சாதனைகளை அஸ்வின் முறியடித்தார்.
இதில் 6 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின், சொந்த மண்ணில் 26வது ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேவின் 25 ஐந்து விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் பட்டியலில் அஸ்வின் கும்ப்ளேவை (111) பின்னுக்குத் தள்ளி அஸ்வின் (113) முதலிடம் பிடித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கும்ப்ளே, "நன்றாக பந்துவீசிய அஷ்வின், கிளாஸ்" என்று பாராட்டியுள்ளார்.
கும்ப்ளே தவிர, கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட பலரும் அஸ்வினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
அனில் கும்ப்ளே ட்வீட்
Well Bowled @ashwinravi99 Class ! 👏👍🏽
— Anil Kumble (@anilkumble1074) March 10, 2023