INDvsAUS நான்காவது டெஸ்ட் : கவாஜாவின் எழுச்சியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே அடுத்தடுத்து வெளியேறினாலும், உஸ்மான் கவாஜா நிலைத்து நின்று ஆட்டநேர முடிவில் 104* ரன்கள் எடுத்தார். மேலும் நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் (49*) அரை சதத்தை நெருங்கியுள்ளார். அதேசமயம், இந்திய தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக கவாஜாவின் முதல் சதம்
தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில்மூன்று 50+ ஸ்கோர்களைப் பெற்றுள்ள கவாஜா, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை இடமாற்றம் செய்தார். கிரிக்பஸ்ஸின் படி, இந்தியாவில் 12 டெஸ்ட் மற்றும் 13 ஆண்டுகளில் டெஸ்ட் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய இடது கை பேட்டர் என்ற பெருமையையும் கவாஜா பெற்றுள்ளார். மேலும் 2015-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர், தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைகளையும் கவாஜா பெற்றுள்ளார்.